1008 சங்கு சிறப்பு பூஜை வழிபாடு!

மதுரை: கார்த்திகை மாத சிறப்பு 1008 சங்கு பூஜை வழிபாடு மதுரை மாவட்டம், மேலூர் திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் கார்த்திகை ஒவ்வொரு திங்களும் சோமவார சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது.
 

இந்த பூஜையில் கலந்து கொண்டால் வீட்டில் செல்வம் பெருகும், திருமணம் நிகழும், வீடுகட்ட நல்லநேரம் பிறக்கும் என்பது ஐய்தீகம்.

மேலும், திருவாதவூர் திருத்தலம் கபிலர் பிறந்த இடம் மாணிக்கவாசகருக்கு என்று தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது. திருவாதவூர் கோயிலில் வந்து சிவனாரை தரிசித்து வந்தால் வாதநோய் தீரும் என்பது அக்கோயில் சிறப்பு.

மீ.நிவேதன்
படங்கள்: சே.சின்னத்துரை

(மாணவ பத்திரிகையாளர்கள்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!