சனிப்பெயர்ச்சி விழா: விழாக்கோலம் பூண்டது கங்கைகொண்டசோழபுரம்

ஜெயங்கொண்டம்: சனிப்பெயர்ச்சி துவங்குவதையொட்டி  கங்கை கொண்ட சோழபுரத்தில் உள்ள பிரகதீஸ் வரர் கோவிலிலில் விசேஷ ஜை நடைபெற உள்ளது.

ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்டசோழபுரத்தில் உலகிலேயே பெரிய சிவலிங்கம் உள்ள பிரகதீஸ் வரர் கோவில் உள்ளது. இங்கு ஒரே பீடத்தில் நவக்கிரகங்கள் தாமரை மலர் வடிவில் அமைந்துள்ளது சிறப்பு அம்சமாகும். சனிபகவான் இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறை ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடைவது சனிப்பெயர்ச்சி விழா.இன்று சனிபகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு 12 ராசி களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் சனிபகவானால்  பாதிக்கப்பட்டுள்ள ராசிக்காரர்கள் சிறப்பு பரிகார பூஜை களும், அர்ச்சனைகளும் செய்ய ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது.

இன்று பகல் 2.43 மணிக்கு நடைபெறும் இந்த சிறப்பு புஜையில் சனி பகவனால் பாதிக்கபட்டவர்களும், சனிபகவான் மற் றொரு ராசிக்கு மாறும்போது சிவபெருமானை நேரில் வந்து பாதம் தொட்டு வணங்கினால் நம்மை பிடித்த பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம்.

இந்துசமய அறநிலையத்துறை மற்றும் தொல்லியத்துறையினர் விழா ஏற்பாட்டினை செய்துள்ளனர்.

- எம்.திலீபன்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!