களை கட்டிய பங்குனி உத்திரப் பெருவிழா

ராமநாதபுரத்தில் அமைந்துள்ள 'வழிவிடு' முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ராமநாதபுரம் மதுரை சாலையில் அமைந்துள்ள கோயிலின் சரியான வரலாறு தெரியாவிட்டாலும், இங்கு செவி வழிச் செய்தியாக கோயில் உருவான வரலாறு கூறப்படுகிறது. சுமார் 100 வருடங்களுக்கு முன்பு இப்பகுதி கள்ளிக்காடாக இருந்திருக்கிறது. தீய சக்திகள் காணப்படுவதாக பரவிய செய்தியால் இவ்வழியே நடந்து செல்ல மக்கள் அச்சப்பட்ட்டனர். அச்சமயத்தில் இப்பகுதியில் வாழ்ந்த முன்னோர்கள் கனவில் ஒரு அசரிரீ ஒலித்ததாம். அதில் வண்டிக்காரன் தெரு பகுதியில் “வேல்” ஒன்று வைத்து வழிபடவேண்டும் என்று ஒலித்தது. பின் மக்கள் ஒன்று சேர்ந்து ஒரு அரச மரம் அடியில் வேல் வைத்து வழிபட்டனர். அதன் பின் மக்கள் அச்சம் நீங்கி அவ்வழியை பயன்படுத்த தொடங்கினர்.

 

மேலும் படங்களுக்கு க்ளிக் செய்க...

 

அச்சத்தை நீக்கி மக்களுக்கு பாதுகாப்பான வழிவிட்டதால் இத்தளம் “வழிவிடுமுருகன் ஆலயம்” என அழைக்கப்படுகிறது. இத்தளத்தில் 75 ஆம் ஆண்டு பங்குனி உற்சவபெருவிழா நடைபெற்று வருகிறது.10வது நாள் திருவிழாவான இன்று பக்தர்கள் பால்குடம்.காவடி. வேல் .சூடி .நேர்த்திகடன் செலுத்தி வருகின்றனர். அதிகாலை 3 மணியிலிருந்து பக்தர்கள் வேண்டுதல்களோடு முருகனை தரிசிக்க பெரும் திராலக் வந்து கொண்டிருக்கின்றனர் .

ர.அரவிந்த (மாணவர் பத்திரிகையாளர்)
படங்கள்:உ.பாண்டி

களை கட்டிய திருப்பரங்குன்றம் பங்குனி பெரு விழா

முருகா, குமரா, முதுக்குமரா, கந்தா, கடம்பா என எப்படி அழைத்தாலும் அழைதவர் மனக்குறைகளை தீர்ப்பவன், வருடத்தில் அனைத்து நாட்களும் இவனுக்கு திருவிழா தான். அதிலும் திருமன வைபவம் என்றால் ஊரே கலைகட்டிவிடும்.


ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் வளர்பிறையில் வரும் உத்திர நட்சத்திரத்தில் பங்குனி உத்சவம் நடைபெரும். இது கந்த கோயிலில் மட்டுமல்லாது மற்ற அனைத்து தெய்வத்தின் கோயில்களிலும் இன்று நடைபெற்றுவருகிறது.


பங்குனி உத்திரத்தன்று திருப்பரங்குன்றம் திருக்கல்யாண உற்சவம் மிகவும் விசேஷம். பங்குனி மாதத்தில் 15 நாட்கள் நடக்கும் இந்தத் பெருவிழா, மார்ச் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பிள்ளையார் சப்பரம், வெள்ளி குதிரை வாகனம், வெள்ளி பூத வாஹனம், அன்ன வாஹனம், சேஷ வாஹனம், யானை வாஹனம், ரிஷப வாஹனம், ஆட்டுகிடாய் வாஹனம், பச்சை குதிரை வாஹனம். 6ஆம் தேதி மிகவும் விசெஷமான முருகன் தெய்வானை திருக்கல்யானம். 7 ஆம் தேதி திருத்தேர் என பங்குனி மாதம் முழுவதும் திருப்பரங்குன்றம் வண்ணமயமாக காட்சி தரும்.

கந்த வீதியுலா ஒரு பக்க்கம், கலை நிகழ்ச்சிகள் மறு பக்கம் என எங்கு திரும்பினாலும் கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. எங்கு பார்தாலும் ஹரோஹரா கோஷத்தோடு பால்குடம், காவடி ஏந்தி, அலகு குத்தி தங்கள் நேர்த்திக்கடனை நிறைவேற்ற முருகனை நோக்கி பக்தர்கள் குவிந்த வருகின்றனர்.

மு.கோதாஸ்ரீ

படங்கள்;மீ.நிவேதன்

(மாணவர் பத்திரிகையாளர்)

Do you like the story?

Please Appreciate the Author by clapping!