மதநல்லிணக்கத்திற்கு வழிகாட்டும் மதுரை மீனாட்சி திருக்கல்யாண விருந்து!

மதுரை மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சிம்மக்கல் சேதுபதி பள்ளியில் நடக்கும் விருந்து மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்து சமயத்தைச் சார்ந்த மக்கள் மட்டுமல்லாமல் அனைத்து சமய மக்களும் இந்த விருந்தில் கலந்து கொண்டு  உணவருந்தி மகிழ்வார்கள். ஒவ்வொரு வருடமும் சுமார் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு இங்கு உணவு சமைக்கப்படுகின்றது.

திருக்கல்யாணத்தின் முதல் நாளே அதற்குத் தேவையான காய்கறிகளை சுத்தப்படுத்துவது, நறுக்குவது போன்ற பணிகளை பொதுமக்களே தன்னார்வலர்களாகக் கலந்து கொண்டு செய்கிறார்கள். மறுநாள் திருக்கல்யாணம் முடிந்த உடனேயே விருந்து ஆரம்பமாகிறது.

அதேபோல திருமணத்திற்குப் பிறகு வழக்கமான திருமணத்தைப் போலவே  தங்கம், வெள்ளி  போன்றவற்றை  மொய் வைப்பார்கள். மதநல்லிணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது இந்த விருந்து.

-ஈ.ஜெ.நந்தகுமார்

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!