மன அமைதிக்கு 6 விஷயங்கள்!


வாழ்வில் உயர்வும் தாழ்வும், மகிழ்ச்சியும் துக்கமும் சேர்ந்தே வரக்கூடியது. தினசரி புதுப்புது சவால்களை சந்தித்து எதிர் நீச்சல் போடும் நமக்கு,  மன அமைதி அத்தனை எளிதாக கிடைப்பதில்லை. இருந்தாலும் மண்டையை பிளக்கும் வெயிலுக்கு இடையில் மண்பானை தண்ணீர் குடிப்பது போல, கீழ்க்கண்ட ஆறு விஷயங்களை கடைபிடித்தால் மனம் அமைதியடைய வாய்ப்பு இருக்கிறது.
 

1) மனதில் கோபம், வெறுப்பு ஏற்படும்போது யாரிடமும் பேசாதீர்கள். வெறுமனே கண்களை மூடி உங்களை சுற்றியுள்ள சத்தங்களை கேளுங்கள். இல்லையென்றால் ஹெட்போனை மாட்டிக்கொண்டு பறவைகளின் கீச்சுக்குரல், காற்றின் இசை, பூனை, நாய்களில் சத்தம், மெல்லிய இசை ஆகியவற்றை கேட்கலாம்.

2) மனத்தளர்ச்சி ஏற்படும் போது கண்களை மூடி' நான் வலிமையானவன்' ' நான் கோபப்படமாட்டேன்' எனக் கூறிக்கொள்ளுங்கள். இது தவறான எண்ணங்களை நோக்கி உங்கள் மனம் செல்வதை தடுக்கும்.

3) மூச்சை இழுத்து விடுவதும் ஒரு தியானம்தான். மெதுவாக மூச்சை இழுத்தபடி ஒன்று முதல் பத்து வரை எண்ணுங்கள். மீண்டும் பத்து முதல் ஒன்று வரை எண்ணியபடி மூச்சை மெதுவாக விடுங்கள்.

4) புதிய காற்று, சூரிய ஒளி, தண்ணீர், உணவு, குழந்தைகள், மலர்கள், சாக்லேட் , வாழ்க்கைப் பாடங்கள், புத்தகம், செல்ல பிராணிகள், நடை பயிற்சி, நடனம், தூக்கம் இவை எல்லாம் உங்களின் மன இறுக்கத்தை போக்கும் அற்புத மருந்துகள்.

5) உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த யாரும் இல்லை என நினைக்கிறீர்களா? அப்படி என்றால் 'மனதுடன் பேசுங்கள்'. 'வாழ்கையில் எனக்கு என்ன தேவை?' என மனதிடம் கேளுங்கள். கேட்கவில்லை என்றால் எதுவும் கிடைக்காது.

6) தோல்வி உங்களுக்குள் எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கலாம். ஆனால், தோல்வியடையாத மனிதர்களே உலகில் இல்லை. தோல்வியே இல்லை என்றால் எப்படி உங்களால் கற்றுக்கொள்ள முடியும்? நீங்கள் தோல்வியடைவில்லை; உங்கள் முயற்சிதான் தோல்வியடைந்து என நினைத்துக்கொள்ளுங்கள்.
 

-ஆ.நந்தகுமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!