வெளியிடப்பட்ட நேரம்: 12:06 (20/04/2016)

கடைசி தொடர்பு:12:58 (20/04/2016)

இயேசுவின் மலைப்பிரசங்கம் (இன்று ஒரு தகவல் -3)

 

*  ஏழை எளியவர்கள் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்கு உரியது.


*  துயருறுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறுவர்.


*  கனிவுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் நாட்டை உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்.


*  நீதி நிலைநாட்டும் வேட்கை கொண்டோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் நிறைவு பெறுவர்.


*  இரக்கமுடையோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் (விண்ணுலகில்) இரக்கம் பெறுவர்.


*  தூய்மையான உள்ளத்தோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளைக் காண்பர்.


*  அமைதி ஏற்படுத்துவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் அவர்கள் 'கடவுளின் மக்கள்' என அழைக்கப்படுவர்.


*  நீதியின் பொருட்டுத் துன்புறுத்தப்படுவோர் பேறு பெற்றோர்; ஏனெனில் விண்ணரசு அவர்களுக்குரியது.


  என் பொருட்டு மக்கள் உங்களை இகழ்ந்து, துன்புறுத்தி, உங்களைப் பற்றி இல்லாதவை-பொல்லாதவையெல்லாம் சொல்லும்போது நீங்கள் பேறு பெற்றவர்களே! மகிழ்ந்து பேருவகை கொள்ளுங்கள்! ஏனெனில் விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும்''

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்