வாத நோய்களை விரட்டும் புன்னை மரம்!


யில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புன்னை மரத்தைச் சுற்றி வந்து கட்டிப்பிடித்து தழுவும்போது அந்த மரத்தின் கதிர்வீச்சுகள் உடலில் பட்டு நோய்கள் குணமடைகிறது. முக்கியமாக பெண்களுக்கான இதய நோய்கள், மார்பக நோய்கள் குணமடைவதாகச் சொல்லப்படுகிறது.

புன்னை மரம் கோயில்கள், சர்ச்சுகளிலும்கூட வளர்க்கப்படுகிறது. புன்னை மரத்தில் படகுகள் செய்வதோடு, வீடுகள் கட்டவும் பயன்படுத்துகிறார்கள். இதன் எண்ணெயை ஆதிகாலத்தில் விளக்கு எரிக்க பயன்படுத்தினார்கள். தற்போது பயோடீசல் தயாரிக்க பயன்படுத்துகிறார்கள்.

வாதநோய், தோல்வியாதி, வெட்டை, மேகப்புண், சொறிசிரங்கு, குஷ்டம் உள்ளிட்ட பல்வேறு நோய்களை குணப்படுத்தும் வல்லமை படைத்தது புன்னை. இதன் பூவை அரைத்து சிரங்குக்கு பற்று போடலாம். இலையை ஊற வைத்த நீரில் குளித்தால் சொறி, சிரங்கு குணமாகும். பூவை நிழலில் உலர்த்தி தூள் செய்து ஒரு சிட்டிகை காலை, மாலை சாப்பிட்டு வர டைபாய்டு காய்ச்சல் குணமாகும். 10 சொட்டு புன்னை எண்ணெய்யை, ஒரு சிட்டிகை சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிட்டால் 'கொனேரியா' என்ற வெள்ளை மேகரணம் சரியாகும்.

இந்த மருந்து சாப்பிடும்போது உப்பில்லா பத்தியம் இருக்க வேண்டியது அவசியம். புன்னை விதையை அரைத்துக் கொதிக்க வைத்துப் பற்று போட்டால் முடக்கு வாதம், கீல்வாயு மற்றும் அனைத்துவிதமான வாதவலிகளும் தீரும். புன்னை மர பட்டைக் குடிநீரால் புண்களைக் கழுவினால் புண்கள் குணமாகும்.

- எம்.மரிய பெல்சின்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!