அல்லாஹ்வின் ஐந்து கேள்விகள் (இன்று ஒரு தகவல்-4)

ஒவ்வொரு மனிதனும் இறந்த பிறகு அல்லாஹ்வின் திருமுன்பு நிறுத்தப்படுவான். அப்போது அவனிடம் கேட்கப்படும் ஐந்து கேள்விகளும் அவன் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றியதாக இருக்கும்.


'உன் வாழ்க்கைக் காலத்தில் எந்தெந்த பணிகளில் ஈடுபட்டாய்?'


'மார்க்கக் கல்வி பெற்றிருந்தால் அதன்படி நடந்துகொண்டாயா?''


'பணத்தை என்னென்ன வழிகளில் சம்பாதித்தாய்?''


'சம்பாதித்த பணத்தை எந்தெந்த வழிகளில் செலவிட்டாய்?'


'உன் உடல் உழைப்பை என்னென்ன பணிகளுக்குப் பயன்படுத்தினாய்?'


நாம் வாழும் காலத்தில் எந்தெந்த நல்ல பணிகளைச் செய்தோம் என்பதையும், நாம் கற்ற மார்க்கக் கல்வி கூறும் நெறிமுறைப்படி வாழ்ந்தோம் என்பதையும், நாம் நல்ல வழிகளில்தான் பணத்தைச் சம்பாதித்தோம் என்பதையும், அப்படி சம்பாதித்த பணத்தை நல்ல காரியங்களுக்குத்தான் பயன் படுத்தினோம் என்பதையும், அல்லாஹ் தனக்குக் கொடுத்த இந்த உடலைக் கொண்டு பலருக்கும் உபகாரமாக இருந்தோமா என்பதையும் அல்லாஹ்விடம் உறுதிப்படுத்த வேண்டும். அப்படி உறுதிப் படுத்தினால், அல்லாஹ்வின் அருளுக்குப் பாத்திரராக முடியும். அதன்படி நாம் வாழவில்லை என்றால், கொடிய நரகமே தண்டனையாகக் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!