வெளியிடப்பட்ட நேரம்: 17:32 (22/04/2016)

கடைசி தொடர்பு:20:12 (22/04/2016)

மன உளைச்சல் போக்கும் மருதமரம்!


திருவிடைமருதூர், திருஇடையாறு ஆகிய ஆலயங்களில் மருத மரம் தலமரமாக விளங்குகிறது. இது குறுகலான நீள்சதுர இலைகளையும் சாம்பல்நிற வழுவழுப்பான பட்டையையும் உடையது. உயர்ந்து வளரும் பெரிய இலையுதிர் மரமான இதன் பட்டை, சதைப்பற்றாக இருக்கும்.

ஆற்றங்கரைகளில் தானாக வளர்ந்து காணப்படும் இதில் கருமருது, கலிமருது, பூமருது என பல்வேறு வகைகள் உள்ளன. மருத மரத்தின் இலை, பழம், விதை, பட்டை என அனைத்துமே மருத்துவக் குணம் கொண்டவையே. இதய நோய் குணமாக மருதம்பட்டை நல்லதொரு மருந்தாகும்.

மருதம்பட்டை, வெண்தாமரைப்பூ போன்றவை 100 கிராம் எடுத்துக்கொண்டு அதனுடன் ஏலம், லவங்கம், திரிகடுகம் 10 கிராம் போன்றவற்றை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதில் 6 கிராம் அளவு எடுத்து அது மூழ்குமளவு தண்ணீர் சேர்த்து கஷாயமாக்கி காலை, மாலை குடித்து வந்தால் இதய நோய் குணமாகும்.

மருதம்பட்டை, வில்வ இலை, துளசி போன்றவற்றை காய வைத்து பொடியாக்கி ஒரு சிட்டிகை அளவு காலை, மாலை 2 வேளை சாப்பிட்டு வந்தால் மன உளைச்சல், தூக்கமின்மை, படபடப்பு போன்றவை சரியாகும். மருதம்பட்டையில் பாதி அளவு சீரகம், சோம்பு, மஞ்சள் போன்றவற்றை எடுத்துக்கொண்டு பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். இதில் 6 கிராம் அளவு எடுத்து 400 மில்லி தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து 200 மில்லியாக்கி அதை குடித்து வந்தால் ரத்த அழுத்தம் சரியாகும்.

மருதம்பட்டை, ஆவாரம்பட்டை போன்றவற்றை சம அளவு எடுத்து அதில் 10-ல் ஒரு பங்கு ஏலம், சுக்கு சேர்த்து பொடியாக்கி அதில் அரை ஸ்பூன் அளவு எடுத்து நீர் விட்டு காய்ச்சி காலை, மாலை என தொடர்ந்து குடித்து வந்தால் சர்க்கரை நோய் குணமாகும்.

- எம்.மரிய பெல்சின்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்