சுவாமிமலை கோயிலில் கந்த சஷ்டி விழா!  

முருகனின் ஆறுபடை வீடுகளில் நான்காவது படைவீடாகத் திகழும் சுவாமிமலை ஸ்ரீசுவாமிநாத சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழா வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில், 31-ம் தேதி காலை 9 மணியளவில் சண்முகசுவாமி, விக்னேஸ்வரர், நவவீரர் மற்றும் பரிவாரங்களுடன் மலைக்கோயிலிலிருந்து படி இறங்கி உற்சவ மண்டபத்துக்கு சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து இரவு படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலா நடைபெறுகிறது.

நவம்பர்  5-ம் தேதி காலை 8 மணிக்கு படிச்சட்டத்தில் சுவாமி திருவீதியுலாவும், 10.30 மணிக்கு சண்முகசுவாமிக்கு 108 சங்காபிஷேக அர்ச்சனை மற்றும் ஆராதனையும் நடைபெறுகிறது. அன்று மாலை சண்முகசுவாமி அம்பாளிடத்தில் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்று சூரசம்ஹாரம் நடைபெற்று தங்கமயில் வாகனத்தில் காட்சியளித்தலும், திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

நவம்பர் 6-ம் தேதி காலை சண்முகசுவாமி புறப்பாடு நடைபெற்று காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. இரவு 7 மணியளவில் தேவசேனா திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நவம்பர் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 8 மணிக்கு ஊஞ்சல் திருவிழா நடைபெறுகிறது. நவம்பர் 9-ம் தேதி இரவு 8 மணிக்கு பல்லக்கு திருவீதியுலாவும், 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சண்முக சுவாமி யதாஸ்தானத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!