ஜெயலலிதா நலம்பெற 1008 பெண்கள் விளக்கு பூஜை! | 1008 women offers vilaku pooja for Jayalalitha recovery

வெளியிடப்பட்ட நேரம்: 17:48 (24/10/2016)

கடைசி தொடர்பு:19:25 (24/10/2016)

ஜெயலலிதா நலம்பெற 1008 பெண்கள் விளக்கு பூஜை!

தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் குணமடைந்து வீடு திரும்பவேண்டியும், நீண்ட ஆயுளுடன் நீடூழி வாழவேண்டியும், திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் ஷராப்பஜார் வீதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீகாமாட்சியம்மன் திருக்கோவிலில் 1008 பெண்கள் விரதமிருந்து காமாட்சி அம்மன் கோயிலில் விளக்கு பூஜை செய்து கூட்டுப்பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.

இந்த விளக்கு பூஜையில் அமைச்சர் சேவூர். எஸ். இராமசந்திரன், எம்.எல்.ஏ கே.மோகன், ஆரணி எம்.பி. வே. ஏழுமலை உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க