வெளியிடப்பட்ட நேரம்: 12:47 (02/11/2016)

கடைசி தொடர்பு:12:53 (02/11/2016)

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 26-ம் தேதி பிரம்மோற்சவம்!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 26-ம் தேதி தொடங்க உள்ளதாகக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு வரும் 26-ம் தேதி வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. டிசம்பர் 4-ம் தேதி வரை நடைபெறும் பிரம்மோற்வ விழாவில், தினமும் இரவு பல்வேறு வாகனங்களில் சாமி ரத உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய விழாவாக கடைசி நாளான டிசம்பர் 4-ம் தேதி காலை பஞ்சமி தீர்த்தமும், மாலையில் கொடியிறக்கம் வைபவமும் நடைபெறுகின்றன. தொடர்ந்து இரவு தங்கப் பல்லக்கில் ரத உற்சவமும் நடைபெற உள்ளன. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க