திருப்பதி ஜபாலி தீர்த்தத்தில் ஏகாந்த சேவை!

திருப்பதி திருமலையில் உள்ள ஜபாலி தீர்த்த ஆஞ்சநேயருக்கு ஏகாந்த சேவை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

அஞ்ஜனாத்திரி மலையில் உள்ள புகழ்பெற்ற ஜபாலி தீர்த்தக்கரையில் வரலாற்று சிறப்புமிக்க ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. திருமலை ஏழுமலையான் கோயிலில் இருந்து பாபவிநாசம் செல்லும் வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோயிலில், திருமலைக்கு வரும் பக்தர்கள் இங்கு வந்து தீர்த்தத்தில் நீராடி ஆஞ்சநேயரை வணங்கிச் செல்வது வழக்கம். அடர்ந்த வனத்துக்குள் இருக்கும் இக்கோயிலுக்கு செல்ல தேவஸ்தானம் படிகளை ஏற்படுத்தி உள்ளது. இதனால், தினமும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இக்கோயில் திறந்திருக்கும்.

கோயிலில் அடர்ந்த வனத்துக்குள் இருந்ததால், சமீபத்தில் எந்த ஏகாந்த சேவையும் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடந்த 29-ம் தேதி இரவு 8.30 மணிக்கு ஏகாந்த சேவை தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் ஏகாந்த சேவையில் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை வழிபட்டு வருவதாக திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!