வெளியிடப்பட்ட நேரம்: 18:06 (04/11/2016)

கடைசி தொடர்பு:18:06 (04/11/2016)

நாளை சூரசம்ஹாரம் - திருச்செந்தூர் விழாக்கோலம்...

ந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி  கோயிலில் நாளை சிறப்பாக நடைபெற உள்ளது. இதனால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் சனிக்கிழமை (நவ.5) நடைபெறுகிறது. இக்கோயிலில் கந்த சஷ்டி திருவிழா அக்டோபர் 31-ம் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலையும், இரவிலும் யாகசாலை பூஜைகள் நடைபெறுகிறது. நான்காம் திருநாளான வியாழக்கிழமை அதிகாலை 3 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார். அங்கு ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனைக்குப் பின் யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றது. அதன்பின் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து தங்கச் சப்பரத்தில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பிரகாரம் வழியாக பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாட சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சுவாமி தங்க ரதத்தில் எழுந்து கிரிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஐந்தாம் திருநாளான வெள்ளிக்கிழமையும் இதே நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

சூரசம்ஹாரம்: விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் ஆறாம் திருநாளான சனிக்கிழமை நடைபெறுகிறது. இதையொட்டி, யாகசாலை பூஜைகளுக்கு பின் பகலில் சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த சுவாமி ஜெயந்திநாதர், திருவாடுவதுறை ஆதீன சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளுகிறார். அங்கு சிறப்பு பூஜைகளுக்குப் பின் மாலை 4.30 மணிக்கு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் கோயிலுக்கு பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

- பரணி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்