வெளியிடப்பட்ட நேரம்: 14:49 (04/11/2016)

கடைசி தொடர்பு:14:52 (04/11/2016)

ஊத்துக்கோட்டை திருநீலகண்டேஸ்வரர் கோயிலில் திருக்கல்யாணம்!

கந்தசஷ்டி விழாவை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை திருநீலகண்டேஸ்வரர் கோயிலில் வரும் 6-ம் தேதி முருகப்பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

ஊத்துக்கோட்டையில் புகழ்பெற்ற ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோயிலில், ஒவ்வோர் ஆண்டும், ஐப்பசி மாதம், முருகப்பெருமானுக்கு கந்த சஷ்டி விழா இரண்டு நாள்கள் வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு, கோயில் வளாகத்தில், வள்ளி தெய்வானையுடன் உள்ள முருகப்பெருமான் சந்நிதியில், இரண்டு நாள் நடைபெறும் கந்த சஷ்டி விழா நாளை தொடங்குகிறது.

நாளை மாலை 3.30 மணிக்கு அம்பாளிடம் சக்திவேல் பெறுதல் நிகழ்ச்சியும், 4 மணிக்கு சூரசம்ஹாரமும் நடைபெறுகிறது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், மாலை 6 மணிக்கு கோயில் வளாகத்தில் முருகப்பெருமானுக்குத் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க