முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் கோலாகலம்!

 

கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், பழநிமலை முருகன் கோயில், திருப்போரூர் கந்தசாமிகோயில் உள்ளிட்ட முருகன் கோயில்களில் கோலாகலமாக நடைபெற்றது.

சென்னை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயிலில் சிறப்பு பூஜைகளுக்குப் பிறகு சூரசம்ஹாரம் நடைபெற்றது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகளுக்குப் பின் கோயில் அருகே உள்ள கடற்கரையில் சூரசம்ஹாரம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

பழநிமலை முருகன் கோயிலில், பல்வேறு சிறப்பு பூஜைகளுக்குப் பின், மேல் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரவதமும், கிழக்கு கிரிவீதியில் பானுகோபன்வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுக சூரவதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற்றது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!