மீனாட்சி அம்மன் கோயிலில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!

 

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுப்புறங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த மதுரை மாநகராட்சி அதிரடியாகத் தடை விதித்துள்ளது.

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளாகிய சித்திரை, ஆவணி, மாரட் மற்றும் மாசி ஆகிய 4 தெருக்களில் வரும் 2017 ஆம் ஆண்டு ஜனவரி 1 ம் தேதி முதல், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் அதிகம் தேங்கிக் கிடக்கின்றன. முக்கியமாக மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் கழிவுகள் அதிகமாகவே காணப்படுகின்றன. இதனால் பாதாள சாக்கடைகளில் அடைப்புகள் ஏற்பட்டு, அடிக்கடி சுகாதார சீர்கேடு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதன் காரணமாக கோயில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பாலிதீன், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்களின் விற்பனைக்கு மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!