சபரிமலையில் நாளை மாலை நடை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாதாந்திர மண்டல பூஜைக்காக, நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது.

சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை 1-ம் தேதி முதல் 41 நாட்கள் மண்டல பூஜை நடைபெறும். இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக, நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை நடை திறக்கப்படுகிறது. மேல்சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து, ஐயப்பனின் தவக்கோலத்தை களைந்து மூலஸ்தானத்தில் தீபம் ஏற்றுவார். அதனைத்தொடர்ந்து  16-ம் தேதி மண்டல கால பூஜை தொடங்கும். தொடர்ச்சியாக, 41 நாட்களும் அதிகாலை, 3 மணிக்கு நடை திறந்து, பூஜைகள் நடைபெறும். இரவு 11 மணிக்கு நடை அடைப்பு நடைபெறும். முக்கிய விழாவான டிசம்பர் 26-ம் தேதி மண்டல பூஜை நடைபெறுகிறது.


ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சபரிமலை செல்லும் பாதைகளில் தற்காலிக ஏடிஎம் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி உறுதியளித்ததாக கேரள முதல்வர் விஜயன் டெல்லியில் பேட்டியளித்தார். தற்காலிக வங்கி கவுன்ட்டர்களும் சபரிமலை பாதையில் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!