சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு!


 

சபரிமலைக்கு பெருவழி பாதை வழியாகச் செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

ஐயப்பன் கோயிலுக்கு எருமேலியில் இருந்து, பெருவழிப் பாதை வழியாக பம்பை செல்லும் பக்தர்கள் அனைவரும், மாலை 5 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். மாலை 5 மணிக்குப் பின் யாருக்கும் அந்த வழியாக அனுமதி இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதற்கு மாற்றாக எருமேலியில் இருந்து கரிமலை, அழுதை வழியாகச் செல்லும் பெருவழி பாதையான, பாரம்பரிய பாதையை பக்தர்கள் பயணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாதையில் பயணிக்கும் பக்தர்களுக்கு குறிப்பிட்ட சில இடங்களில் அன்னதானமும், சுக்கு நீரும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!