வெளியிடப்பட்ட நேரம்: 04:09 (22/12/2016)

கடைசி தொடர்பு:10:10 (22/12/2016)

திருமலைக்கு கால்நடையாக செல்லும் பக்தர்களுக்கு ஆதார் கட்டாயம்!

திருப்பதி ஏலுமலையானை தரிசிக்க கால்நடையாகச் செல்பவர்கள் சிறப்பு வழியாக சென்று தரிசிக்கலாம். இனிவரும் நாட்களில் கால்நடையாகச் செல்பவர்கள் தங்களின் ஆதார் அட்டை அல்லது  வேறு ஏதேனும் அடையாள அட்டையை  காண்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு சிறப்பு நுழைவு மற்றும் இலவச லட்டுக்கான டிக்கெட் கிடைக்கும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அடையாள அட்டை இல்லை என்றால் அவர்களுக்கு சிறப்பு நுழைவு தரிசனம் மற்றும் இலவச லட்டுக்கான டிக்கெட் தரப்படமாட்டாது. பக்தர்களிடம் ஆதார் கார்டு இல்லையெனில், வேறு ஏதேனும் அடையாள அட்டை விவரங்களைக் கொடுக்க வேண்டும். முறைகேடுகளைத் தவிர்க்கவே இந்த முடிவாம். நடந்து செல்லும் ஒவ்வொரு பக்தருக்கும் இலவச லட்டுடன் மானிய விலையில் கூடுதலாக இரண்டு லட்டுகள் தரப்பட்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க