சிலை கடத்தல் வழக்கில் சுபாஷ் கபூர் ஆஜர்

சிலை கடத்தல் வழக்கில் வெளிநாட்டு வாழ் இந்தியரான சுபாஷ் கபூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

நெல்லை மாவட்டம் பழவூர் கோயிலில் சிலைகள் கடத்திய வழக்கில், அமெரிக்கவாழ் இந்தியரான  சுபாஷ் கபூர் கடந்த 2011-ம் ஆண்டு ஜெர்மனியில் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து நேபாளத்தைச் சேர்ந்த 2 தரகர்களை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் மும்பையில் கைது செய்தார். 

இந்நிலையில், சிலை கடத்தல் மன்னன் சுபாஷ்கபூருக்கும், மும்பையில் கைது செய்யப்பட்டவர்களுக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து, நெல்லை பழவூர், நாறும்பூநாதர் கோயிலில் 13 சிலைகள் கடத்தியது மற்றும் அரியலூர் மாவட்டம் சுந்தரவள்ளி, விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 28 சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில், சுபாஷ் கபூர் இன்று ஶ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சுபாஷ் கபூரை ஜனவரி 9-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளது. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!