பிரதோஷ வேளை - நந்திதேவர் ஆல்பம் #NandhiDarshan

ர்ம சாஸ்திரங்கள் சொல்லும் நெறிப்படி வாழ்ந்த சிலாதர் என்ற முனிவர், தனக்கு தாயின் வயிற்றில் பிறக்காத மகன் வேண்டும் என்று சிவபெருமானைக் குறித்து தவம் இருந்தார். அவருடைய தவத்துக்கு இரங்கிய சிவபெருமானும் அப்படியே வரம் தந்தார். ஒருநாள் சிலாதர் தன்னுடைய நிலத்தை உழுதுகொண்டு இருந்தபோது, காளையைப் போன்ற தோற்றத்துடன் ஓர் உருவம் சிலாதரைப் பார்த்து தந்தையே என்று அழைத்தது. சிலாதர் கேட்டபடியே அவருக்கு பிள்ளை கிடைத்தாலும், அவர் தன்னுடைய காளைகளை அதிகம் நேசித்ததால், காளையைப் போலவே ஒரு பிள்ளை அவருக்குக் கிடைத்தான். அவரும் தனக்கு சிவன் அருளால் கிடைத்த பிள்ளைக்கு நந்தி என்று பெயர் சூட்டி வளர்த்தார். நந்தி கல்வி கற்க ஆரம்பித்து சகல சாஸ்திர விற்பன்னன் ஆனான். நந்தி சிவதரிசனம் பெறவும், தான் மரணமின்றி இருக்கவும் சமுத்திர தீர்த்தத்தில் ஓரிடத்தில் கோடி சிவ நாமம் ஜபித்துத் தவம் செய்தான். சிவபெருமான் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்க இன்னும் கோடி சிவநாமம் ஜபிக்க ஆயுள் வேண்டும் என்றான். அவ்வாறே வரம் அளித்தார் பரமசிவன். இதேபோல் மூன்றுமுறை நடைபெற்றது. இறுதியில் சிவபெருமான் நந்திதேவரை கணநாதராக ஏற்றுக்கொண்டார். சிவகணங்களுக்கெல்லாம் ஆதி கணம் நந்திதேவர்தான். எப்போது சிவ சந்நிதியில் ஈசனைப் பிரியாமல் இருப்பவர் நந்தி தேவர்தான். பிரதோஷ காலத்தில் சிவபெருமான் பார்வதி தேவியுடன் நந்திதேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் நின்று நடனம் புரிவதாக ஐதீகம். அதனால்தான் பிரதோஷ காலத்தில் நந்தி தேவருக்கும் சோமாஸ்கந்த மூர்த்திக்கும் ஒரே நேரத்தில் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. 
                         இந்த பிரதோஷ வேளையில் நந்தி தேவரின் ஆல்பம் இதோ உங்களுக்காக....

 

- ம.மாரிமுத்து

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!