அண்ணாமலையில் ஓர் அருள்ஞானி... ரமண மகரிஷியின் பிறந்த நாள் இன்று! | Sri Ramana Maharshi birthday special

வெளியிடப்பட்ட நேரம்: 15:40 (30/12/2016)

கடைசி தொடர்பு:15:40 (30/12/2016)

அண்ணாமலையில் ஓர் அருள்ஞானி... ரமண மகரிஷியின் பிறந்த நாள் இன்று!

 

அண்ணாமலையில்

அண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலையார் கோயிலை அடுத்து, நம் நினைவுக்கு வருவது ரமணாசிரமம்தான். 'பகவான் மகரிஷி' என்று ரமணரை பக்தர்கள் அன்போடு அழைக்கிறார்கள்.

மதுரை மாவட்டம், திருச்சுழியில் சுந்தரம் ஐயர் அழகம்மை தம்பதிக்குப் பிறந்த ரமணருக்கு பெற்றோர் வைத்த பெயர் வேங்கடராமன். 30-12-1879 அன்று பிறந்த ரமணர் திண்டுக்கலில் தொடக்கக் கல்வியையும், மதுரையில் உயர் கல்வியும் படித்தார். ஆனால், படிப்பில் பெரிதாக நாட்டமில்லை. விளையாட்டுப் பிள்ளையாகவே இருந்தார்.

தாயாரை சிறுவயதிலேயே இழந்ததால் தனது சித்தப்பாவின் வீட்டில்தான் தங்கி வளர்ந்து வந்தார். ஒரு சமயம், உடல் நலமில்லாது போகவே படுக்கையில் சுருண்டு கிடந்தார். கிட்டத்தட்ட இறந்ததாகவே உணர்ந்தார். அப்போது, 'இந்த உடல் நான் அல்ல. இந்த மூச்சு நான் அல்ல. இந்த உயிர் நான் அல்ல. இவற்றையெல்லாம் கடந்த ஒன்று இருக்கிறது. அதுவே நான். அதுவே பிரம்மம்' என அவருக்குள் தோன்றியது. அன்று அவர் மனதில் பிறந்த ஆன்மிகப் பேரொளியே அவரை அருணாசலேஸ்வரரை வந்தடையச்செய்தது.

1896 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நாள், தனது 16 வயதில் திருவண்ணாமலை ஆலயத்தின் உள்ளே வந்தவர், நேராக அண்ணாமலையார் சந்நிதிக்குப் போனார். அன்று அவர் ‘‘அப்பா! நான் வந்துவிட்டேன்’’ என்று மனமுருகக் கூறியவர்தான். அதன் பிறகு, 54 ஆண்டுகள் அவர் திருவண்ணாமலையை விட்டு எங்குமே செல்லவில்லை. உலகமே அவரைத் தேடிதான் வந்தது. 'விதிச்சது நடக்கும், விதிக்காதது நடக்காது' என்று சொன்ன ரமண மகரிஷியின் பிறந்த நாள் இன்று...

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்

[X] Close

[X] Close