வடபழனி முருகன் கோயிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

வடபழனி முருகன் கோயிலில் புத்தாண்டு தினத்தில் சிறப்பு பூஜைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அதிகாலை 4 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை முருக பெருமானுக்கு வெள்ளி நாணய கவச அலங்காரம் செய்யப்படுகின்றன.

பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை தங்ககவச அலங்காரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சந்தனக்காப்பு மற்றும் புஷ்ப அலங்காரமும் நடைபெறுகின்றன. முக்கியமாக, புத்தாண்டு தினத்தில் பக்தர்கள் அதிக அளவில் கோயிலுக்கு வருவார்கள் என்பதால், தரிசனமும் செய்ய வசதியாக வடபழனி ஆண்டவர் கோயில் தெருவிலுள்ள தெற்கு ராஜகோபுரம் வழியாக செல்ல சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!