திருவல்லிக்கேணியில் சொர்க்கவாசல் திறப்பு

108 திவ்ய தேசங்களில் ஒன்றான, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடு களைகட்டியது. சரியாக அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு, நம்மாழ்வாரைக் கண்டார் பெருமாள். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு 'கோவிந்தா' கோஷம் முழங்கி சுவாமி தரிசனம் செய்தனர்.

 

triplicane sorga vasal

 வைகுண்ட ஏகாதசியான இன்று, அனைத்து பெருமாள் கோயில்களிலும் பரமபத வாசல் அல்லது சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும். இந்நிகழ்வில் கலந்துகொண்டு சொர்க்கவாசல் வழியாக சென்று, சுவாமி தரிசனம் செய்தால் நிச்சயம்,மனித வாழ்வுக்குப்பின் சொர்க்கத்தை அடையலாம் என்பது இந்துமக்களின் நம்பிக்கை. இந்நிகழ்ச்சி ஶ்ரீரங்கம் ரெங்கநாத பெருமாள் கோயிலிலும், திருமலை வெங்கடாஜலபதி கோயிலிலும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது. 

படம் - தி.குமரகுருபரன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!