மயிலை மார்கழி கொண்டாட்டம்... பொம்மலாட்டம், கூத்து, இசை நிகழ்ச்சி..! (ஆல்பம்)


மயிலை மார்கழி  கொண்டாட்டம் சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயிலில் 4 நாட்கள் கலைவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.


தமிழர்களின் பாரம்பர்ய கலாசாரத்தை போற்றும் வகையில் 'மயிலாப்பூர் பெஸ்டிவல்' எனும் பெயரில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதேபோன்று இந்த ஆண்டும் கடந்த 5-ம் தேதி தொடங்கி, 8-ம் தேதி வரையிலான 4 நாட்கள் இந்நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 

கிராமிய கலைநிகழ்ச்சி 


இவ்விழா, சென்னை மயிலாப்பூர் ஸ்ரீகபாலீஸ்வரர் கோயில் கிழக்கு வாசல் எதிரே உள்ள 16 தூண் மண்டபத்தின் முன்பு,  கடந்த 5-ம் தேதி தொடங்கியது .இவ்விழாவில் இசை, நாட்டியம், கூத்து உள்ளிட்ட 40  கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 200-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் பங்கேற்றனர். 


விழாவையொட்டி, சுந்தரேஸ்வர் தெருவில் பாரம்பர்ய உணவுத் திருவிழா நடைபெற்றது.  இதில் கொழுக்கட்டை,சாட் போன்ற உணவுகளும், உடுப்பி, செட்டிநாடு உணவு வகைகளும் இடம்பெற்றன. 


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்  உள்பட பழைமையான கோயில்கள் மற்றும் கட்டடங்களையும், அதன் வரலாற்றையும் விளக்கும் வகையில் புகைப்படக் கண்காட்சியும், சிறு ஓவியக் கண்காட்சியும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற கைவினைப் பொருட்கள் கண்காட்சி, கோ-ஆப் டெக்ஸ் புடவைகள் விற்பனைக் கண்காட்சி ஆகியவை இடம்பெற்றன. இதனை வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் உள்பட ஏராளமானோர் பார்வையிட்டனர்.

பரமபதம் ஆடும் பெண்கள் 


பாரம்பர்ய விளையாட்டுகளான தாயக்கட்டம், பரமபதம் போட்டிகள் லேடி சிவசாமி பெண்கள் பள்ளியில் நடந்தது. இதில்  சிறுவர்கள் முதல் முதியோர் வரை அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்று,  உற்சாகத்துடன் விளையாடி மகிழ்ந்தனர்.
மயிலாப்பூர் வடக்குமாட வீதியில் கோலப்போட்டி நடைபெற்றது. ஏராளமான பெண்கள் இதில் கலந்து கொண்டு, அந்த வீதி முழுவதும் பல்வேறு வகையான  கோலமிட்டு அசத்தினர். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன. 


பரமபதம், கோலப்போட்டி படங்கள் பார்க்க.... 

 


மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் மண்டபத்தின் முன்பாக  6-ம் தேதி (வெள்ளிக்கிழமை)  கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய கலைநிகழ்ச்சி மற்றும் சிவாகலாலயம் அகாடமி குழுவினரின் நடன நாட்டிய நிகழ்ச்சி நடந்தது.
அதனைத் தொடர்ந்து மகாபாரத கதையை எடுத்துக்கூறும் வகையில் சேலத்தைச் சேர்ந்த கலைஞர்கள் நடத்திய ‘கட்ட பொம்மலாட்டம்’ நடைபெற்றது.

பொம்மலாட்டம் 


இந்நிகழ்ச்சிக்கான படங்கள் பார்க்க...

 


8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை  இரவு 9 மணியளவில் செய்யாறு அருள்மிகு ஶ்ரீ மந்தவெளி அம்மன் நாடகக் குழுவினரின்  பாரம்பர்ய கலையான 'கட்டைக் கூத்து' நடைபெற்றது.

கட்டைக் கூத்து


இந்த படங்களை பார்க்க...

 

 

தொகுப்பு: ஜி.லட்சுமணன்,  படங்கள்: நிவேதன்.

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!