வெளியிடப்பட்ட நேரம்: 01:16 (11/01/2017)

கடைசி தொடர்பு:01:13 (11/01/2017)

நடராஜ பெருமானுக்கு இன்று 'ஆருத்ரா தரிசனம்' !

மார்கழியில் வரும் திருவாதிரை நட்சத்திர நாள், ஒரு புண்ணிய தினம் என்றும், அன்றைய தினம் ஆருத்ரா என்றும் அழைக்கப்படுகிறது. அன்றைய தினத்தில், எல்லா சிவ ஆலயங்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். முக்கியமாக முதல் நாள் இரவு சிவ ஆலயங்களிலும் விடிய விடிய பூஜைகள் நடத்தப்பட்டு, அதனைத்தொடர்ந்து, அதிகாலையில் எல்லா சிவ ஆலயங்களிலும் நடராஜ பெருமானுக்கு 18 வகையான சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டுச் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்யவேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்றுமுறை திதியிலும், மூன்றுமுறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மார்கழி திருவாதிரையே மிகச்சிறப்பானது என்று கூறப்படுகிறது.

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீநடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும் புஷ்பாஞ்சலியும் நடைபெறுகிறது. பின்னர் ஆயிரங்கால் மண்டபத்தில் திருவாபரண அலங்காரமும் சித்சபையில் ரகசிய பூஜையும் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீநடராஜமூர்த்தியும் ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் புறப்பட்டு நடனப்பந்தலில் நடனமாடி ஆருத்ரா தரிசனக் காட்சியளித்து, சித்சபா பிரவேசம் செய்கின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க