சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை! | Prior to the Makaravilakku at Sabarimala pooja begins today

வெளியிடப்பட்ட நேரம்: 02:42 (14/01/2017)

கடைசி தொடர்பு:02:41 (14/01/2017)

சபரிமலையில் இன்று மகரவிளக்கு பூஜை!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை இன்று மாலை நடைபெறுகிறது. இதனால், இன்று அதிகாலை சுவாமிக்கு மகர சங்கராந்தி நெய் அபிஷேகம் நடைபெறுகிறது.

உச்சிகால பூஜைக்குப் பின்னர் பகல் 1 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும். இதன் பிறகு மகரஜோதி தெரியும் வரை பக்தர்கள் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட மாட்டார்கள். பின்னர் மாலை 5 மணியளவில் கோயில் நடை திறக்கப்படும். பந்தளத்திலிருந்து புறப்பட்ட திருவாபரணம் மாலை 6.30 மணியளவில் சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து திருவாபரணம் ஐயப்ப விக்கிரகத்தில் அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். இந்த சமயத்தில் பொன்னம்பலமேட்டில் 3 முறை மகரஜோதி தெரியும். இதன்பிறகே பக்தர்கள் 18-ம் படி ஏறி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதனைத் தொடர்ந்து மகரவிளக்கு பூஜை நடைபெறும். பூஜைக்குப் பின், இரவு 11.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படுகிறது.

இதனிடையே, சபரிமலையில் ஐயப்பனுக்கு நடைபெறும் மகரவிளக்கு பூஜையில் பங்கேற்க, தற்போது பெருவழிப் பாதை, பம்பை பிரதான நடைபாதை, வண்டிப்பெரியார் உப்புப்பாறை ஆகிய 3 வழிகளில் லட்சக்கணக்கான பக்தர்கள் 24 மணி நேரமும் வந்த வண்ணம் உள்ளனர்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க