சந்திராஷ்டமம் என்ன செய்யும்?#Chandrashtama

 

சந்திராஷ்டமம் 


ஒருவருக்கு மனம் தெளிவாக இருக்கும்போதுதான் அவரால் சிறப்பாகச் சிந்திக்கவும், செயல்படவும் முடியும். ஒருவருடைய மனம் தெளிவாக இருக்கவேண்டும் என்றால், அவருடைய ஜனன ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து நல்ல இடத்தில் அமையப் பெற்று இருக்கவேண்டும். ஜன்ம லக்கினத்துக்கு 6, 8, 12 ஆகிய மறைவு ஸ்தானங்களில் சந்திரன் அமையப் பெற்றிருந்தால், அவருடைய வாழ்க்கையில் சந்திர தசை, சந்திரபுக்தி நடைபெறும் காலங்களிலும், மற்ற கிரக தசைகளில் சந்திர புக்தி நடைபெறும் காலங்களிலும் தேவையற்ற மனஉளைச்சலுக்கு ஆளாக நேரும் என்கிறார் 'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசி. மேலும் எந்தெந்த ராசிக்கு எந்த ராசி சந்திராஷ்டமம் என்று விளக்குகிறார்.

'ஜோதிட மாமணி' கிருஷ்ணதுளசிஅதேபோல் கோசாரப்படியும் ஒருவருடைய ராசிக்கு 8-ம் ராசியில் சந்திரன் இருந்தால், அவருக்கு அன்று சந்திராஷ்டம நாள் என்று தெரிந்துகொள்ளலாம். சந்திரன் மனோகாரகன் என்பதால், சந்திரன் 8-ல் மறைந்திருக்கும் காரணத்தால், ஜாதகரின் மனம் சந்திராஷ்டம நாள்களில் மிகுந்த குழப்பமான நிலையில் காணப்படும். எனவே அந்த நாள்களில் புதிய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பதுடன், வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் செய்யவேண்டியது அவசியமாகிறது.

ஒருவர் பிறந்த ராசிக்கு, 8 - வது ராசியில் அமையும் நட்சத்திரங்கள் சந்திராஷ்டமம் உள்ளவை. அந்த நட்சத்திரங்களில் முகூர்த்தம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய காரியங்கள் தொடங்குவதையும் தவிர்க்க வேண்டும். 

உதாரணமாக அசுவினி நட்சத்திரம் உள்ள மேஷத்துக்கு எட்டாவது ராசி விருச்சிகம். அதற்குரிய நட்சத்திரங்கள் விசாகம் 4 - பாதம், அனுஷம், கேட்டை ஆகியவை. ஆகவே, அசுவினி நட்சத்திரக்காரருக்கு இந்த நட்சத்திரங்கள் உள்ள நாட்களில் திருமணம் வைக்காமல் இருத்தல் நலம். அதே போல் இந்த லக்னத்திலும் முகூர்த்தம் வைக்கக்கூடாது. 

சந்திராஷ்டம நாள்களில் தொடங்கும் காரியங்கள் பிரச்னைகளைத் தருவதுடன், காரிய வெற்றியையும் தருவதில்லை. எனவே முக்கியமான காரியங்களுக்கு நாள் பார்க்கும்போது, தன்னுடைய ராசிக்கு சந்திராஷ்டம நாளா என்று பார்ப்பது அவசியம். திருமணத்தின்போதும் மணமக்கள் இருவருக்கும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்ப்பதும் மிகவும் அவசியம். மற்றபடி ஒரு புதிய காரியத்தில் ஈடுபடும்போது அந்த காரியத்துக்கு கர்த்தா யாரோ அவருடைய ராசிக்கு மட்டும் சந்திராஷ்டமம் இல்லாமல் இருக்கிறதா என்று பார்த்தால் போதும். சந்திராஷ்டம நாட்களைத் தெரிந்துகொள்ள எளிய அட்டவணை. கீழே தரப்பட்டுள்ளது.

நட்சத்திரம்: அசுவினி, பரணி, கிருத்திகை 1-ம் பாதம் மேஷ ராசி அன்பர்களுக்கு விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை ஆகிய நட்சத்திரங்கள் சந்திராஷ்டம நட்சத்திரங்கள் ஆகும். எனவே மேஷ ராசி அன்பர்களுக்கு சந்திராஷ்டம ராசி விருச்சிகம்.
கிருத்திகை 2,3,4-ம் பாதங்களிலும், ரோகிணி, மிருகசீரிஷம் 1,2-ம் பாதங்களில் பிறந்தவர்களுக்கும் மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம் இடம் பெறும் தனுசு ராசியில் சந்திரன் இருக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

மிருகசீரிஷம் 3,4ம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3-ம் பாதங்களில் பிறந்த மிதுன ராசி அன்பர்களுக்கு மகரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும். சந்திரன்

கடக ராசி அன்பர்களுக்கு கும்பத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

சிம்ம ராசி அன்பர்களுக்கு மீனத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

கன்னி ராசி அன்பர்களுக்கு மேஷத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

துலாம் ராசியைச் சேர்ந்தவர்களுக்கு ரிஷபத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

விருச்சிக ராசியைச் சேர்ந்தவர்களுக்கு மிதுனத்தில் சந்திரன் இருக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

தனுசு ராசி அன்பர்களுக்கு கடக ராசியில் சந்திரன் இருக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

மகர ராசி அன்பர்களுக்கு சிம்ம ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

கும்ப ராசி அன்பர்களுக்கு கன்னி ராசியில் சந்திரன் இருக்கும் நாள்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

மீனராசியைச் சேர்ந்தவர்களுக்கு துலாம் ராசியில் சந்திரன் இருக்கும் தினங்கள் சந்திராஷ்டம நாள்கள் ஆகும்.

ஒரு ராசியில் சந்திரன் இரண்டேகால் நாள்கள் இருப்பார் என்பதை கவனத்தில் கொள்ளவும்.
தவிர்க்கவே முடியாத காரணங்களால் சந்திராஷ்டம நாளில் ஒரு புதிய காரியத்தைத் தொடங்கவேண்டிய அவசியம் ஏற்பட்டால், அம்பிகைக்கு பாலபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டுவிட்டு தொடங்கலாம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!