கங்கையின் தமிழக பிரவேசம்... கங்கைகொண்ட சோழபுரத்தில் கோலாகலம்

கங்கைகொண்டான் என்றும் கடாரம் கொண்டான் என்றும் பல்வேறு விருதுகளைப் பெற்ற மாமன்னர் ராஜேந்திரசோழர், கங்கைகொண்ட சோழபுரத்தில் நிர்மாணித்த கங்கைகொண்ட சோழீச்வரர் திருக்கோயில் மிக அற்புதமான சிவாலயம் ஆகும்.

கங்கைகொண்ட சோழபுரம்


ஆன்மிகச் சிறப்பும் வரலாற்றுச் சிறப்பும் கொண்ட இந்தத் திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று சுமார் 85 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது.
தொன்மைச் சிறப்பு மிக்க இந்த ஆலயத்தை மறுபடியும் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்ய மிகப் பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டவர் திரு.கோமகன்.

கங்கைகொண்ட சோழபுரம்

மேலும் படங்களுக்கு இந்த படத்தை கிளிக் செய்க...


அவருடைய சீரிய முயற்சியால் திருப்பணிகள் நிறைவுபெற்று, வரும் 2-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதை முன்னிட்டு, 
கங்கையில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர்க் குடங்கள் நேற்று மதியம் 1 மணியளவில் திருலோக்கியில் இருந்து, மங்கல இசை ஒலிக்க, யானையின்மீது ஒரு கங்கையின் புனிதநீர்க் குடத்தை திரு.கோமகன் ஏந்தி வர, நூற்றுக்கணக்கான பக்தர்கள் கங்கைநீர்க் குடத்தை ஏந்தியபடி ஊர்வலமாக வந்தனர். மாலை 6 மணியளவில் கங்கைகொண்டசோழபுரத்தை அடைந்தனர்.

 


- படங்கள்: எம்.திலீபன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!