செங்கல்பட்டு விநாயகர் கோயிலில் கும்பாபிஷேகம்!

வினைதீர்த்த விநாயகர்

செங்கல்பட்டு சின்னக்கடை வீதியில் எழுந்தருளி உள்ள வினைதீர்த்த விநாயகர் கோயிலில் வரும் 9-ம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வினைதீர்த்த விநாயகர் கோயிலில் இன்று மகா கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக் கிரக ஹோமம் கோபூஜை, தன பூஜை ஆகியவை சிறப்பாக நடைபெற்றது. நாளை விசேஷ சாந்தி, தீபாராதனை, அஷ்டபந்தனம் சாத்துதல் உள்ளிட்ட வைபங்கள் நடைபெறுகின்றன. 9-ம் தேதி வியாழக்கிழமை அதிகாலையில், யாத்ரா தானம், கடம் புறப்பாடு ஆகியவையும், காலை 7.30 மணிக்கு மேல் 9 மணிக்குள் கும்பாபிஷேகமும் நடைபெறுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!