வெளியிடப்பட்ட நேரம்: 04:31 (15/02/2017)

கடைசி தொடர்பு:04:30 (15/02/2017)

வினை தீர்க்கும் விநாயகர் விசேஷ தகவல்கள்! #PhotoStory


முழுமுதற் கடவுளான விநாயகரைச் சரணடைந்து வழிபட்டால், சகல துன்பங்களிலிருந்து விடுபடலாம்;  நமது கவலைகள் யாவும் சடுதியில் விலகும்; வேண்டியது வேண்டியபடி நிறைவேறும் என்பது நம்பிக்கை . 
 

விநாயகர் 

 

நாம்  வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே அருளும் பொருட்டு, தெருக்கோடியிலும், மரத்தின் அடியிலும், நதிகளின் கரைகளிலுமாகக் வீற்றிருக்கிறார். அவரைப் பற்றியும் நாம் அறிந்திராத அறிய வேண்டிய அற்புத தகவல்களை இங்கே தெரிந்து கொள்வோம்...

1.தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் ஆதலால் பிள்ளையாருக்கு விநாயகன் என்று பெயர். அதாவது 'வி’ என்றால் இதற்கு மேல் ஒன்றும் இல்லை எனப் பொருள். நாயகர் என்றால் தலைவர் எனப் பொருள். இவருக்கு மேல் பெரியவர் யாருமில்லை என்று பொருள்பட விநாயகர் என்று பெயரிடப்பட்டது. 

 

விநாயகர் 


2.கணங்களுக்கு அதிபதி என்பதால் கணபதி எனும் பெயர் கொண்டார்.  அதாவது கணபதி என்ற சொல்லுக்குத் தேவகணங்களின் தலைவன் என்று பொருள். ‘க’ என்பது ஞானநெறியில் ஆன்மா எழுவதையும், ‘ண’ என்பது மோட்சம் பெறுவதையும், ‘பதி’ என்பது ஞான நெறியில் திளைத்துப் பரம்பொருளை அடைதலையும் குறிக்கும். மேலும் ‘மனோவாக்கினை கடந்த தலைவன்’ என்றும் பொருள்கொள்ளலாம்!  விக்னங்களைப் போக்குபவர் ஆதலால் விக்னேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார். 

 

விநாயகர்  


3.விநாயகர் தாய் தந்தையரை அன்புடன் வழிபட்டதால் பிள்ளை என்ற பெயருடன் ஆர் என்ற பன்மை விகுதி பெற்று பிள்ளையார் என்று பேர் பெற்றார்.

கணபதி 

 


4.விநாயகர் ஒரு கொம்பு, இரு காதுகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கைகள் ஆறெழுத்துக்கள் உடையவர். விநாயகர் பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய், உயர்திணையாய், அக்திணையாய் எல்லாமாய் விளங்குகிறார்.

 

கணபதி  


5.யானையை அடக்கும் கருவிகள் பாசமும் அங்குசமும், விநாயகர் தன் கரங்களில் பாசம் மற்றும் அங்குசத்தை ஏந்தி இருக்கின்றார். தன்னை அடக்குவார் ஒருவரும் இலர் என்ற குறிப்பை இதன் மூலம் உணர்த்துகிறார்.

 

கணபதி 


6.கும்பம் ஏந்திய கை படைக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கை காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே விநாயகர், சிருஷ்டி, ஸ்தி, சங்காரம், திரௌபவம், அனுக்கிரகம் என்ற ஐம்பெருந் தொழில்களை ஐந்து கரங்களால் புரிந்து ஆன்மாக்களுக்கும் அருள் புரிகின்றார்.

 

கணபதி 


7.சந்தனம், மஞ்சள், களிமண், சாணம் என எளிதாகக் கிடைக்கக் கூடிய பொருளில் விநாயகரை செய்து வழிபடுவார்கள்.  விநாயகருக்கு எளிதாக கிடைக்கக் கூடிய அருகம்புல் மிக விருப்பம். அருகு வைத்து விநாயகரை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கி, இன்பம் பெருகும்.

கணபதி 


8.செம்பருத்தி மலர், தும்பைப்பூ,  எருக்கம்பூ, சங்கு புஷ்பம், மா விலை, அருகம்புல், வில்வ இலை ஆகியவை விநாயகரை அர்ச்சனை செய்யவும் மாலையாக அணிவிக்கவும் மிகவும் உகந்தவையாக கருதப்படுகிறது.

 

கணபதி

 


9.விநாயகருக்கு கரும்பு, அவரை, பழங்கள், சர்க்கரை, பருப்பு, நெய், எள், பொரி, அவல், துவரை, இளநீர், தேன், பயறு, அப்பம், பச்சரிசி, பிட்டு, வெள்ளரிப்பழம், கிழங்கு, அன்னம், கடலை முதலியன வைத்து நிவேதனம் செய்ய வேண்டும்.

 

 

கணபதி 


10.ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் கோயமுத்தூரில் புலியகுளம் பகுதியில் இருக்கிறார். முந்தி விநாயகர் என்ற திருநாமத்துடன் இவர் அருள் தருகிறார். 190 டன் எடையுள்ள இவர் ஒரே கல்லால் உருவானவர். உயரம் 19.10 அடி, நீளம் 11 அடி அகலம் 10 அடி, ஏணிப்படி மூலம்தான் இவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.


தொகுப்பு:ஜி.லட்சுமணன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்