கோடி புண்ணியம் அருளும் குரு தரிசனம்! #PhotoStory | Glory of Guru Bhagavan Temples #PhotoStory

வெளியிடப்பட்ட நேரம்: 06:46 (16/02/2017)

கடைசி தொடர்பு:06:46 (16/02/2017)

கோடி புண்ணியம் அருளும் குரு தரிசனம்! #PhotoStory

 

நவகிரகங்களில் பூரண சுப பலம் பெற்றவர் குருபகவான். தேவர்களுக்கு குருவான இவரை பிரகஸ்பதி என்றும், வியாழ பகவான் என்றும் அழைப்பர்.  சிவ வழிபாடு நீங்கலாக, கிரக நிலைகளால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து விடுபட வேண்டி குரு பகவானை (வியாழன்) வழிபாடு செய்வதும் அவசியம்.

குரு தரிசனம் 

 

ஜாதகத்தில் குரு தோஷம் இருப்பவர்கள், குருபகவானுக்கு உரிய பரிகாரங்களைச் செய்து வழிபட்டால், வாழ்வில் சுபிட்சம் உண்டாகும். அப்படிப்பட்ட குரு ஸ்தலங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.


குரு வீற்றிருந்த குருவித்துறை!

குரு பகவான் 


மதுரை மாவட்டம்  சோழவந்தான் அருகே அமைந்துள்ளது குருவித்துறை. குருவின் பெயராலேயே அமைந்த தலம்; குரு பகவான் திருமாலின் அருள்பெற்ற தலம் இது. குரு வீற்றிருந்த துறை என்பதால், குருவிருந்த துறை என்ற பெயர் ஏற்பட்டு, அந்தப் பெயரே குருவித்துறை என்று ஊர்ப் பெயராக வழங்குகிறது.


பதவி உயர்வு தரும் திட்டை குரு பகவான்!

தஞ்சாவூர் அருகே அமைந்துள்ள திட்டை திருக்கோயிலில் அருள்பாலிக்கிறார் குரு பகவான். தேவகுருவான பிரகஸ்பதி, கிரகங்களில் ஒருவராக பதவி உயர்வு பெற்ற தலம் திட்டை. இவரை வழிபட்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ராஜ யோக அருளும் திருவேங்கைவாசல்!

குரு பகவான் 

 

புதுக்கோட்டைகீரனூர் சாலையில், அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். திருவேங்கைவாசலில் உள்ள இறைவன் புலியாக வந்து, காமதேனுவின் சாபம் நீங்கப் பெற்றதால் இறைவனின் திருநாமம் ஶ்ரீவியாக்ரபுரீஸ்வரர். இந்த தலத்தில் ஶ்ரீ தட்சிணாமூர்த்தி அபய வர ஹஸ்தங்களுடன், ஒரு கரத்தில் ருத்திராட்சமும் மற்றொரு கரத்தில் சர்ப்பமும் ஏந்தி காட்சி தருகிறார். இங்கு வந்து தட்சிணாமூர்த்தியை வழிபட்டால், குழந்தைகளின் ஞாபக சக்தி பெருகும்; தொழில் விருத்தியாகும் என்பது நம்பிக்கை.


ஸ்ரீ சிவயோக ஹரி குரு அருளும் திருவையாறு!

குரு பகவான்  


மகாவிஷ்ணுவுக்குக் குருவாக இருந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம், திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் திருக்கோயில். திருவீழிமிழலையில் கண்மலரிட்டு வழிபட்டு சக்கராயுதம் பெற்ற திருமால், வேதங்களின் பெருமைகளை உணர்ந்து, இந்தத் தலத்துக்கு வந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றாராம். இங்கு வந்து ஶ்ரீதட்சிணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.


ஶ்ரீ விநாயகருடன்....ஸ்ரீ தட்சிணாமூர்த்தி 

புதுக்கோட்டையின் அருகிலேயே சிறப்புடன் அமைந்துள்ளது ஸ்ரீ பிரகதாம்பாள் திருக்கோயில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சிவனாரின் திருநாமம் ஸ்ரீ கோகர்ணேஸ்வரர்.  

ஶ்ரீவிநாயகருடன், ஸ்ரீ தட்சிணாமூர்த்தி   ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி. சிவனாரது சந்நிதியின் கோஷ்டத்தில் இருந்தபடி அருள்வதுதான் வழக்கம்.  ஆனால் இங்கே, விநாயகருக்கு அருகில் இருந்தபடி  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி அருள்வது இத்தலத்தின் சிறப்பு. இங்கு வந்து ஶ்ரீதட்சிணாமூர்த்தியை வழிபட்டால், காரியத் தடைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் எல்லாம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.


குருவின் சாபம் நீக்கிய கோயில்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள முன்னூற்று மங்கலத்தில் அமைந்துள்ளது ஶ்ரீஆடவல்லீஸ்வரர் திருத்தலம்.
குருவருள் இருந்தால்தான்  திருவருள் கிடைக்கும் என்பார்கள்.  குருவான பிரகஸ்பதிக்கே சிவன், தேவியுடன் காட்சி தந்த தலம் இது. "இந்தத் தலத்திற்கு வரும் என்னுடைய அடியவர்களுக்கெல்லாம் குருவருளைத் தந்து வாழ வைப்பாயாக" என்று வாழ்த்தி அருளிய தலமாக போற்றப்படுகிறது.

ஶ்ரீதட்சிணாமூர்த்தி  இத்தலம் குரு யோகத்தைத் தரவல்லது: முன்னூர் தலத்திற்கு வருபவர்களின் வாழ்க்கையில் சீக்கிரம் நல்லவிதமான முன்னேற்றங்கள் உண்டாகும் என்பது நம்பிக்கை.  


தொகுப்பு: லட்சுமணன்.ஜி


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்