மருதமலை முருகன் கோயிலுக்கு விரைவில் ரோப்கார் வசதி! #marudhamalaitemple

முருகனின் புண்ணிய ஸ்தலங்களில் ஒன்றான மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு விரைவில் 'ரோப்கார்' அமைக்கப்படவுள்ளது. அதற்கான ஆய்வுகள் முடிந்து திட்டமதிப்பீடு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.  இதற்குப் பத்துக் கோடிவரை செலவாகும் எனச் சொல்லப்படுகிறது. ஒரு நபருக்கு 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை வசூலிக்கப்படலாம். கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ள ஆன்மிக தலங்களுள் மிக முக்கியமானது இந்த மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில். இந்தக் கோயிலில் மொத்தம் ஐந்து சிறிய பேருந்துகள் பக்தர்களின் வசதிக்கேற்ப இயக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!