வெளியிடப்பட்ட நேரம்: 09:16 (18/02/2017)

கடைசி தொடர்பு:09:20 (18/02/2017)

விருச்சிக ராசியில் சனி இருக்கும்போதெல்லாம் தமிழ்நாட்டில் நிகழ்ந்த மாற்றங்கள்..!

ஜோதிடர் 'பெருங்குளம் ராமகிருஷ்ணன்'

நவக்கிரகங்களில் மிக மிக முக்கியமான கிரகம் சனி. 'குரு கொடுத்தால் சனி கெடுப்பார்; சனி கொடுத்தால் யார் தடுப்பார்' என்று சொல்வார்கள். எல்லா கிரகங்களையும் பெயர் சொல்லிக் குறிப்பிடும்போது, சூரிய பகவான், குரு பகவான் என்று குறிப்பிடுவார்கள். ஆனால், சனியைக் குறிப்பிடும்போது மட்டும் 'சனீஸ்வரன்' என்றுதான் குறிப்பிடுவார்கள். ஈஸ்வரன் பட்டம் பெற்றவர் அவர் மட்டுமே. 

தமிழ்நாடு - செவ்வாய்தமிழ்நாடுசனிபகவான் - தமிழ்நாடு

சனியின் முக்கியத்துவத்தைப் பல விஷயங்களில் நாம் அறிய முடியும். கிரகங்களிலேயே ஒரு ராசியில் அதிகமான காலம் சஞ்சாரம்ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் எடுத்துக்கொள்பவர் சனி பகவான் தான். இவர் மட்டும்தான் ஒரு ராசியில் இரண்டரை வருடங்கள் இருப்பார். காரகத்துவத்தைப் பொறுத்தமட்டில், சனி பகவான் மூலமாகத்தான் ஒருவரது ஆயுள் - கர்மா - தொழில் ஆகியவற்றை நாம் தெரிந்துகொள்ள முடியும். 

சனி பகவான் ஒவ்வொரு ராசியில் சஞ்சாரம் செய்யும்போதும் நமது நாட்டில் சில மாற்றங்கள்,  சில திடுக்கிடும் சம்பவங்கள் ஏற்படுகின்றன.  குறிப்பாக, பூமிக்காரகனான  செவ்வாயின் வீட்டுக்கு வரும்போதெல்லாம் நாட்டில் நிறையவே மாற்றங்கள் நிகழ்கின்றன. 
தற்போதைய கிரகச் சூழ்நிலையில், சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்துவருகிறார். 

நாம் இங்கே பார்க்கப் போவது சனி பகவான் எப்போதெல்லாம் விருச்சிக ராசியில் சஞ்சாரம் செய்தாரோ அப்போதெல்லாம் தமிழ்நாட்டில் நிகழ்ந்த சில சமூக அரசியல் சூழல் மாற்றங்களைத்தான் பார்க்கப்போகிறோம். 

 

கடந்த 60 வருடங்களில் சனியினால் நிகழ்ந்த மாற்றங்கள்: 

முதலாவது மாற்றம்: 

1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி அன்று புதன்கிழமை மாலை 6.37க்கு சனி பகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் தனுசு ராசிக்கு  1958ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி நள்ளிரவு அதிகாலை 4.04க்கு மாற்றம் அடைந்தார். 

16-05 - 1956 திருச்சியில், தி.மு.கவின் 2 வது மாநாடு. தேர்தலில் போட்டியிட தி.மு.க முடிவு. 112 இடங்களில் போட்டியிட்டு 15 இடங்களைக் கைப்பற்றியது. 

அண்ணா

01.11.1956 - தமிழ்நாடு சென்னை ராஜதானியிலிருந்து தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. 

23.11.1956 - 200 பேரை பலி கொண்ட அரியலூர் ரெயில் விபத்து. 

01.04.1957 _ ஒரணா ரெண்டணா என்று இருந்த நயா பைசா முறை ஒழிந்து, தசம நாணய முறைக்கு நாடு மாறியது. ஆம், அப்போதெல்லாம், ஒரு ரூபாய்க்கு 12 அணா அதாவது 96 பைசா. இதற்குப் பிறகுதான் ஒரு ரூபாய்க்கு 100 காசுகள் என்ற நடைமுறை வந்தது. 

10.09.1957 - முதுகுளத்தூர் கலவரம் 

1957 - கடும் வறட்சி 

கலைஞர்

02-03-1958 - தி.மு.கவுக்கு உதயசூரியன் சின்னம் ஒதுக்கப்பட்டது. 

இரண்டாவது மாற்றம்: 

1985ம் ஆண்டு அக்டோபர் மாதம் 24ம் தேதி அன்று வியாழக்கிழமை காலை 10.16க்கு சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். விருச்சிக ராசியிலிருந்து சனி பகவான் தனுசு ராசிக்கு 1988ம் ஆண்டு நவம்பர் மாதம் 05ம் தேதி காலை 11.37க்கு மாற்றம் அடைந்தார். 

indian post speed post

01-04-1986 இப்போதுள்ள கூரியர் தபால் முறைக்கு வித்திட்ட 'ஸ்பீடு போஸ்ட்' எனும் துரித தபால் முறை நடைமுறைக்கு வந்தது. 

1986 - 1987 - கடும் வறட்சி 

24 - 12 - 1987 - எம். ஜி. ஆர் மரணம் - இதைத் தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க கட்சி பிளவுபட்டது. அ.தி.மு.க ஜானகி அணி, அ.தி.மு.க. ஜெயலலிதா அணி எனப் பிரிந்தது. 

எம்ஜிஆர் சசிகலா 

24-12-1987 நாவலர் நெடுஞ்செழியன் இடைக்கால முதல்வர் 

07-01-1988 - ஜானகி ராமச்சந்திரன் முதல்வராகப் பதவியேற்பு 

26-01-1988 - ஜானகி ராமச்சந்திரன் நம்பிக்கை வாகெடுப்பில் வெற்றி. அதைத்தொடர்ந்து கலவரம். கவர்னர் ஆட்சி அமலாக்கப்பட்டது

மூன்றாவது மாற்றம் (தற்போதைய கிரக நிலை): 

2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ம் தேதி அன்று செவ்வாய்க்கிழமை மதியம் 2.44க்கு சனி பகவான் துலாம் ராசியிலிருந்து விருச்சிக ராசிக்கு மாறினார். தற்போது விருச்சிக ராசியிலிருக்கும் சனி பகவான் தனுசு ராசிக்கு  2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15 ம் தேதி காலை 6.33க்கு மாற்றம் அடைய இருக்கிறார். 

2015 - 114 வருடங்களுக்குப் பிறகு தமிழகத்தில் வரலாறு காணாத மழை. 

2016 டிசம்பர் 11 - 22 ஆண்டுகளுக்குப் பிறகு வர்தா புயல். 

2016 டிசம்பர் 05 - ஜெயலலிதா மரணம் - மீண்டும் அ.இ.அ.தி.மு. கட்சியில் பிளவு. 

ஜெயலலிதா - சசிகலா

சனிபகவான் மேஷம் - சிம்மம் - விருச்சிகம் ஆகிய ராசிகளில் சஞ்சாரம் செய்யும்போது நாட்டில் புயல், கனமழை, வறட்சி, ஆட்சியில் சலனங்கள், புதுப் புது நோய்கள், பொருளாதாரச் சரிவு போன்ற பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். 

சனிபகவான் பெயர்ச்சி ஆகி ரிஷபம் - கன்னி - தனுசு ஆகிய ராசிகளில் சஞ்சரிக்கும்போது மேற்கண்ட பிரச்னைகளுக்கான தீர்வுகளுக்கும் வழிகாட்டுவார்.

தொகுப்பு: எஸ்.கதிரேசன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்