வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (18/02/2017)

கடைசி தொடர்பு:22:47 (18/02/2017)

இந்தியா, உலகுக்கு அளித்த நன்கொடைகள்!

 

உலகில் எவ்வளவோ நாடுகள், எத்தனையோ வகையான மக்கள், எண்ணற்ற மொழிகள் இருந்தாலும், இந்தியா என்றாலே எப்போதும் ஸ்பெஷல்தான். நமது இந்தியா உலகுக்கு மொழி, கலாசாரம், பண்பாடு மற்றும் அறிவியல்  என அளித்த நன்கொடைகளைப் பற்றி ஒரு சிறுபார்வை.

இந்தியா

 

* கணித எண் முறை இந்தியாவில்தான் முதன்முதலில் கண்டறியப்பட்டது. இன்று கணினிகளுக்கெல்லாம் அத்தியாவசியமாகிவிட்ட பூஜ்ஜியம் ஆர்யப்பட்டரால் கண்டுபிடிக்கப்பட்டதே.

* உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு.700-ல் தட்சசீலத்தில் நிறுவப்பட்டது. உலகெங்கிலும் இருந்து வந்து பல்லாயிரக்கணக்கான மாணவர்கள்  பல்வேறு துறைகளில் இங்கு கல்வி கற்றனர்.

* கி.மு. 4-ம் நூற்றாண்டில் நிறுவப்பட்ட நாளாந்தா பல்கலைக்கழகம் கல்வித்துறையில் பண்டைய பாரதத்தின் மிகப்பெரும் சாதனையாக வரலாற்று ஆய்வாளர்களால் பார்க்கப்படுகின்றது.

 

குமரிமுனை

* உலகில் தோன்றிய முதல் மருத்துவ முறை. சித்த மருத்துவ முறையாகும். இது பழந்தமிழ்நாடான குமரிக் கண்டத்தை தொடர்ந்து, தற்போதைய தமிழகம் மட்டுமல்லாமல் உலகின் பல பாகங்களிலும் மக்கள் நலத்தைப் பேணி வருகின்றது. 

* அகத்தியரின் சீடர்களில் ஒருவரான தேரையர், ஒரு மனிதனின் கபாலத்துக்குள் சென்றிருந்த தேரையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி இப்பெயரைப் பெற்றார்.

.கல்வி

* ஆயுர்வேத மருத்துவ முறை 2,500 வருடங்களுக்கு முன்பே சரகரால் தொகுத்தளிக்கப்பட்டுள்ளது.

* இன்றைய நவீன யுகத்தின் பிரதிபலிப்பு இந்தியாவை ஏழ்மையான மற்றும் வளரும் நாடாகப் படம் பிடித்துக் காட்டினாலும், 17-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பிரிட்டனின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் வரை பாரதம் செல்வச் செழிப்புள்ள நாடாகவே திகழ்ந்துள்ளது. மேற்கத்திய நாகரிகத்தை நாம் பின்பற்றத் தொடங்கிய பிறகுதான் நமக்குப் பற்றாக்குறை என்பதே தெரியவந்தது.

* கப்பலைச் செலுத்தும் கலையானது சுமார் 6,000 வருடங்களுக்கு முன்பே சிந்து நதிக்கரையில் பிறந்த ஒன்றாகும். நேவிகேஷன் (Navigation) என்ற சொல் 'நவ்கத்' (Navgath) என்ற சமஸ்கிருத சொல்லிலிருந்து வந்ததாகும். 'நேவி என்ற சொல்லும் 'நோவ் என்ற சமஸ்கிருதச் சொல்லின் பிரதிபலிப்பே.

* கி.பி 5-ம் நூற்றாண்டிலேயே பாஸ்கராச்சரியார், பூமி சூரியனைத் தன் சுற்றுப்பாதையில் சுற்றிவர ஆகும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறியுள்ளார். 

* 'உலக பொதுமறை' என அழைக்கப்படும் 'திருக்குறள்' தமிழ் மொழியில் எழுதப்பட்ட மிகச் சிறந்த நூலாகும். இதற்கு இணையான நூல் வேறொன்றுமில்லை என சொல்லதக்க வகையில் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய 'கலைக்களஞ்சியம்' இதுவாகும். இத்திருக்குறள் திருவள்ளுவரால் 2,000 வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டது.

சிதம்பரம் கோயில் 

 


- எஸ்.கதிரேசன்
 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்