மகா பைரவர் ருத்ர கோயிலில் சுமங்கலி யாக பூஜை!

மகா பைரவர் ருத்ர கோயிலில், வரும் 23-ம் தேதி சுமங்கலி யாக பூஜை நடைபெறுகிறது.

செங்கல்பட்டு அருகில், திருவடிச்சூலம் பகுதியில் உள்ள மகா பைரவர் ருத்ர கோயிலில், வரும் 23-ம் தேதி தம்பதி பூஜை மற்றும் சுமங்கலி யாக பூஜை வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. குடும்ப ஒற்றுமைக்காகவும், குடும்பத்தில் உள்ளவர்களின் சகல தோஷங்களும் நிவர்த்தியாக வேண்டும் என்பதற்காகவும் இந்தப் பூஜை நடத்தப்படுகிறது. முக்கியமாக, நல்லவிதமாக இல்லறம் நடத்திவரும் பெண்ணை இந்து மதம், பராசக்தியின் வடிவமாகவே பார்க்கிறது. எனவே அத்தகைய பெண்களை வழிபடுவதை, பராசக்தி வழிபாடாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.  இந்தக் கோயிலில் நடைபெறும் தம்பதி பூஜை மற்றும் சுமங்கலி யாக பூஜைகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள், முன்பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!