வெளியிடப்பட்ட நேரம்: 05:24 (22/02/2017)

கடைசி தொடர்பு:10:40 (22/02/2017)

திருப்பதி கோயிலில் லட்டு விலை உயர்கிறது!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தின் விலையை அதிகரிக்க, தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது.

திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயிலில், வழிபாட்டுக்குச் செல்லும் பக்தர்களுக்கு இலவசமாகவும், மானிய விலையிலும் லட்டு வழங்கப்பட்டுவருகிறது. இதனால், கடந்த மூன்று  ஆண்டுகளில் சுமார் 140 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரு லட்டு தயாரிக்க தேவஸ்தானத்துக்கு அடக்கச் செலவாக 32 ரூபாய் ஆகும் என்றும், இதில் 25 ரூபாய் தேவஸ்தானத்தின் சார்பில் வழங்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 2016-ல் மட்டும் லட்டு விற்பனையில் 23 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதனால், இழப்பைச் சமாளிக்கும் வகையில், பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டின் விலையை உயர்த்த தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க