பதவி உயர்வு கிடைக்க எந்த தெய்வங்களை வழிபட வேண்டும்? | Which god do we need to worship for Promotion?

வெளியிடப்பட்ட நேரம்: 21:43 (22/02/2017)

கடைசி தொடர்பு:21:42 (22/02/2017)

பதவி உயர்வு கிடைக்க எந்த தெய்வங்களை வழிபட வேண்டும்?

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், பணியிடத்தில் தான் முன்னுக்கு வரவேண்டும் என்று விரும்புவது இயல்புதான். அனைவருக்குமே இப்படியான விருப்பமும் எதிர்பார்ப்பும் இருக்கவே செய்யும்.

பதவி உயர்வு 

அப்படிப்பட்ட எதிர்பார்ப்பு சிலருக்குச் சிலவேளைகளில் நிறைவேறாமல் போவதுண்டு. எதனால் அப்படி ஏற்படுகிறது? பதவி உயர்வு ஜோதிடர் ஶ்ரீரங்கம் கிருஷ்ணன்தடைப்படும்போது, அவர்கள் எந்த தெய்வத்தை வழிபட்டு பலன் பெறலாம் என்பது பற்றி ஜோதிட விற்பன்னர் ஶ்ரீரங்கம் கிருஷ்ணன் விளக்குகிறார்.

'''அணியின் வெற்றி முக்கியம் என்றாலும், என்னுடைய ஸ்கோரையும் நான் உயர்த்த வேண்டியது எனது பொறுப்பு' என்றார் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி. ஒரு நிறுவனத்தில் பணிபுரியும்போது அந்த நிறுவனம் சிறப்பாக இயங்கிட, அதன் உட்பிவுகளாக இருக்கும் பல்வேறு அமைப்புகளும் சிறந்த முறையில் கட்டமைக்கப் பட்டிருக்கவேண்டும். அதேபோல் அதில் பணிபுரியும் ஒவ்வொருவரும் சிறப்பாகப் பணிபுரிந்தால் நிச்சயம் அந்த நிறுவனம் முதலிடம் பெறும்.

ஒருவருக்கு பதவி உயர்வும் அதனால் சம்பள உயர்வும் அவருடைய 10-ம் இடமான தொழில் ஸ்தானத்தின் வலிமையைப் பொறுத்தே அமைகிறது.

காளை மீது அமர்ந்த சிவன் - பார்வதி

ஒருவரது ஜாதகத்தில் தொழில்ஸ்தானம் என்பது லக்னத்திலிருந்து 10-ம் இடமாகும். அதில் அவர் தரும் பணியாற்றும் விதம், அதாவது அதில் அவரது ஈடுபாடு, சகமனிதர்களிடம் பழகும் சூழல் ஆகியவற்றைக் குறிப்பது ஆறாமிடமாகும்.

இப்படி வேலைக்குச் சென்ற பிறகு, உடனே அவருக்குப் பதவி உயர்வு என்பது இருக்காது. அந்த வேலையில் அவரது ஈடுபாடு, அவர் காட்டும்விசுவாசம் இதெல்லாவற்றையும் கணக்கில் கொண்டுதான் அவரது முதலாளி அவருக்குப் பதவி உயர்வைக் கொடுப்பார்.

ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 7-ம் வீட்டுக்குடைய அதிபதி, 9-ம் வீட்டுக்குடைய அதிபதி, 11-ம் வீட்டுக்குடைய அதிபதி ஆகியோர் நல்லநிலையில் அமர்ந்து பலம் பெறவேண்டும்.

7-ம் வீடு என்பது அவர் வேலை செய்யும் இடம். 9-ம் வீடு என்பது அவரது உயர் அதிகாரி. 11-ம் இடம் என்பது அவரது உயர்வை, புகழைச் சொல்லுமிடம். இந்த இடங்கள் நன்கு பலம்பெற்றுஅமைந்தால், அவருக்கு வேலையில் உயர்வு உண்டு. எப்போது?

மேலே சொன்னபடி அந்த அமைப்பு இருந்து, அந்த கிரகங்களின் தசா புத்திகள் நடப்பில் வரும்போது, கோசார பலனும் சாதகமாக இருக்கும்போது அந்த உயர்வு கிடைக்கும். மற்ற நேரங்களில் கிடைக்காமல் தள்ளிப்போகும்.

பதவி உயர்வு தள்ளிப்போகும் நேரங்களில் அதற்கான ஜோதிட ரீதியான காரணத்தைத் தெரிந்துகொண்டு, தெய்வ வழிபாடு செய்வது அவசியமாகும்.

பழனி மலை

எந்த ராசி - எந்தக் கோயில்?

*மேஷம், விருச்சிக ராசி அன்பர்கள் மலை மேல் இருக்கும் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுவது நல்ல பலனைத்தரும். வைணவர்களென்றால் லட்சுமி நரசிம்மர் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.

* ரிஷபம், துலாம் ராசியைச் சேர்ந்தவர்கள் அம்பாள் அருள்பாலிக்கும் அம்மன் கோயிலுக்கோ, பிரதோஷ நாளில் சிவன் கோயிலுக்கோ சென்று வழிபடலம். வைணவர்கள் லட்சுமி வழிபாட்டில் ஈடுபடலாம். குறிப்பாக, ஶ்ரீரங்கம் தாயார் சந்நிதி, கீழ் திருப்பதியிலிருக்கும் அலர்மேலுமங்காபுரம் சென்றுவழிபடலாம்.

திருப்பதி

மிதுனம், கன்னி ராசியினர் அருகிலிருக்கும் பெருமாள் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம்.

கடக ராசி அன்பர்கள் பார்வதிக்குத் தனிச் சந்நிதியுள்ள கோயில்கள், மாரியம்மன் கோயில்களுக்குச் சென்று வழிபடலாம்.

சிம்ம ராசியினர் சிவன் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

தட்சிணாமூர்த்தி

தனுசு, மீன ராசியினர் தட்சிணாமூர்த்தியை வழிபட்டு பூஜை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

மகரம், கும்ப ராசி அன்பர்கள் விநாயகர், துர்கை, ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களை வழிபடலாம். திருப்பதிக்கு சென்று வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

- எஸ்.கதிரேசன் 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்