வெளியிடப்பட்ட நேரம்: 05:07 (23/02/2017)

கடைசி தொடர்பு:15:08 (23/02/2017)

மகாசிவராத்திரி ஸ்பெஷல் 'விபூதி லிங்கேஸ்வரர்' தரிசனம்! #PhotoStory

திருத்தணிக்கு 10 கி.மீ. தொலைவில், ஆந்திர மாநில எல்லையான நகரி அருகே உள்ள கீளப்பட்டு என்னும் கிராமத்தில், திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர் ஆலயத்தில், சிவராத்திரியை விசேஷமாகக் கொண்டாட இருக்கிறார்கள்.

சிவராத்திரி  

நூற்றாண்டு பழமையான இந்த ஆலயத்தில், மகா சிவராத்திரி வரை பக்தர்கள் அனைவருக்கும் பஸ்மநாதர் திவ்ய தரிசனம் அளிக்க இருக்கிறார்.  

விபூதி லிங்கம்

 

மகா சிவராத்திரியை முன்னிட்டு இங்கு 10 அடி உயரம் கொண்ட பீடத்தில், 500 கிலோ விபூதியினால் (பஸ்மத்தினால்)  20 அடி உயர, ஒய்யாரமான விபூதி லிங்கம் ஏற்படுத்தி உள்ளனர்.  

விபூதி லிங்கம்

அவை, லிங்கத்தைச் சுற்றி அகோரிகள் தங்களுக்கே உரித்தான கம்பீரமான தோற்றத்தில், பஸ்மநாதரான ஈசனை வணங்குவதுபோல காட்சி அருமையாக அமைந்துள்ளது.

விபூதி லிங்கம்

கணேசன் என்பவரின்  தலைமையிலான குழு, 15 நாட்களில்  இரவு பகல் பாராமல், கோயிலிலேயே தங்கியிருந்து பஸ்மநாதரை உருவாக்கி இருக்கிறார்கள்.

வில்வ லிங்கம்


இதேபோல கடந்த ஆண்டு வில்வலிங்கம் உருவாக்கியிருந்தார்கள்.

கரும்பு லிங்கம்


அதற்கு  முந்தைய ஆண்டு கரும்புலிங்கம்  உருவாக்கியிருந்தார்கள்.

விபூதி லிங்கம்


இந்த முறை விபூதி லிங்கத்தை உருவாக்கி, பக்தி மணம் கமழச் செய்திருக்கிறார்கள்.    

திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர்


இந்தத் திருத்தலம், தோஷங்களைப் போக்கும் தலம் என்று போற்றப்படுகிறது.

திரிபுரசுந்தரி சமேத சந்திரமௌளீஸ்வரர் சிவ லிங்கம்


பிரமாண்டமான விபூதிலிங்கத்தை மனம் குளிரத் தரிசியுங்கள். என்ன சிவனடியார்களே, மகா சிவராத்திரிக்கு விபூதி லிங்கேஸ்வரரை தரிசிக்கத் தயாராகிவிட்டீர்களா...


படங்கள்: -எம்.எஸ்.நாகராஜன், பூர்ணானந்தன் (மாணவ பத்திரிகையாளர்)


 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்