சிவ வழிபாடு... எந்த ராசிக்காரர்கள் எப்படி வழிபடவேண்டும்?

மகா சிவராத்திரி அன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடவேண்டும். அதேசமயம் ஓவ்வொரு ராசியினரும் எப்படி சிவ வழிபாடு செய்யவேண்டும்? அதற்கென்று நியதிகள் ஏதும் இருக்கிறதா என்பது பற்றி ஆஸ்ட்ரோ ஶ்ரீரங்கம் கிருஷ்ணனைக் கேட்டோம்.

சிவ வழிபாடு 

 ''வைணவர்களுக்கு வைகுண்ட ஏகாதசியைப் போல் சைவர்களுக்கு சிவராத்திரி.  சிவபெருமானுக்கு உகந்த  விரதங்களில் ஒன்று மகாசிவராத்திரி. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசியன்று மகாசிவராத்திரி அனுசரிக்கப்படுகின்றது.  
சிவபெருமான் லிங்கத்தில் அருள்பாலிக்கத்தொடங்கியதும், பிரம்மா, விஷ்ணு இருவரும் சிவபெருமானின்  அடிமுடி தேடியதும், தேவ அசுரர்கள் பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை அருந்தி சிவபெருமான் உலகைக் காப்பாற்றியதும் இந்த நாளில்தான்.

மேஷ ராசிக்காரர்கள் மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடுவது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். விருச்சிக ராசிக்காரர்கள் திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பூஜைப்பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கங்கைகொண்ட சோழபுரம் 

ரிஷப ராசிக்காரர்கள், திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச்  சென்று பூஜைப்பொருட்களுடன் தயிர் கலந்த நீரை வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

மிதுன ராசிக்காரர்கள், திருச்செங்கோடு, சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய இடங்களுக்குச் சென்று வரலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச்  சென்று பூஜைப்பொருட்களுடன்  கரும்புச்சாறு வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கடக ராசிக்காரர்கள், திருக்கடையூர், திருவானைக்காவல், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் சென்று வழிபடலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச்  சென்று பூஜைப்பொருட்களுடன் சர்க்கரைக் கலந்த பால் வைத்துப் படைத்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

சிதம்பரம் 

சிம்ம ராசிக்காரர்கள், சிதம்பரம், திருவண்ணாமலை சென்று வழிபடலாம்.  அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று  சிவப்புச் சந்தனம் கலந்த பாலால் அபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம்.

கன்னி ராசிக்காரர்கள்,  காஞ்சி ஏகாம்பரேஸ்வரர், மதுரை மீனாட்சி சொக்கநாதரை வழிபடலாம். துலாம் ராசிக்காரர்கள் சிதம்பரம், காளஹஸ்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கோயில் சென்று தரிசிப்பது மிகுந்த பலனைத் தரும்.அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச்  சென்று பாலாபிஷேகம் செய்து பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.
தனுசு ராசிக்காரர்கள், திருப்பரங்குன்றம், திருவண்ணாமலை சென்று வழிபடுவது நல்லது.  மீன ராசிக்காரர்கள் வேதாரண்யம், ஜலகண்டேஸ்வரர் கோயில், திருவானைக்காவல் சென்று வழிபட்டால் சிறப்பான பலனைப் பெறலாம். அப்படிச் செல்ல முடியாதவர்கள் அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று பாலில் குங்குமப்பூ கலந்து அபிஷேகம் செய்து, பஞ்சாட்சர மந்திரத்தைச் சொல்லி வணங்கலாம். செல்வச்செழிப்பு மிகும்.

காஞ்சி ஏகாம்பரேஸ்வரர்  

மகர ராசிக்காரர்கள் காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் சிறப்பான பலன்களை அடையலாம். கும்பராசிக்காரர்கள் சிதம்பரம், காளஹஸ்தி ஆகிய சிவதலங்களுக்குச் சென்று வழிபட்டால், உற்சாகம் தரும் செய்திகள் உங்களை வந்தடையும்.

சிவலிங்கத்துக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்வது நல்லது. வீட்டிலேயே பூஜை செய்பவர்கள், பூஜைப் பொருட்களுடன்  வில்வப் பழம் வைத்துப் படைத்தால், நினைத்த காரியம் கைகூடும்.


- எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!