மஹாசிவராத்திரி: சிவலிங்கத்திலிருந்து நடராஜர்! | Maha Shivarathri festival. Natraja idol comes from Shiva Lingam

வெளியிடப்பட்ட நேரம்: 23:00 (24/02/2017)

கடைசி தொடர்பு:23:00 (24/02/2017)

மஹாசிவராத்திரி: சிவலிங்கத்திலிருந்து நடராஜர்!

மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு விருதுநகர் அருள்மிகு சொக்கநாதர் - மீனாட்சியம்மன் கோயிலில் சிவலிங்கத்திலிருந்து நடராஜர் தோன்றிய காட்சி பக்தர்களைப் பரவசப்படுத்தியது. இந்தியா முழுவதும் உள்ள அனைத்து சிவ ஆலயங்களிலும் இன்று மஹாசிவராத்திரி விழா நடைபெறுகிறது. அதன்படி, விருதுநகர் அருள்மிகு சொக்கநாதர் - மீனாட்சியம்மன் திருக்கோயிலில் இன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு, அட்டையில் சிவலிங்கம் போல உருவம் அமைத்து ஒரு நிமிடத்திற்கு ஒருமுறை சிவலிங்கம் இரண்டாகப் பிளந்து நடுவில் நடராஜர் தோன்றுவதைப் போல, மிகவும் வித்தியாசமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பக்தர்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து, வணங்கியும் செல்கின்றனர். 

- முத்துராஜ்

நீங்க எப்படி பீல் பண்றீங்க