முப்பெரும் ஜுப்ளி விழா காணும் புனித சூசையப்பர் ஆலயம்! 

சூசையப்பர் ஆலயம்

மன்னார்குடியில் உள்ள புனித சூசைப்பயப்பர் ஆலயம் வரும் 27-ம் தேதி முப்பெரும் ஜுப்ளி  விழா காண்கிறது.

மன்னார்குடியில் உள்ள புனித சூசைப்பயப்பர் ஆலயத்தில், 350-ம் ஆண்டு கிறிஸ்துவ பாரம்பரிய நினைவு விழாவும், ஆலயம் எழுப்பப்பட்டு 175-ம் ஆண்டு விழாவும், குருக்கள் இல்லம் அமைக்கப்பட்டு  175-ம் ஆண்டு விழா என, மூன்று விழாக்களையும் நினைவு கூறும் வகையில், வரும் 27-ம் தேதி 'முப்பெரும் விழாவாக'  தஞ்சாவூர் மறைமாவட்ட கிறிஸ்துவ பங்கு மக்களால் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த முப்பெரும் ஜுப்ளி விழாவிற்கு, தஞ்சாவூர், கும்பகோணம், பாளையங்கோட்டை, குளித்துறை ஆகிய மறைமாவட்டங்களை சேர்ந்த ஆயர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

சென்னை-மயிலாப்பூர் உயர் மறைமாவட்டத்தில் இருந்து ஏறக் குறைய 64 ஆண்டுகளுக்கு முன், தஞ்சாவூர் தனி மறைமாவட்டமாக மாறியது. 1952-ம் ஆண்டு தஞ்சாவூர் மறைமாவட்டம் உருவான பிறகு, அதில் முதல் ஆயராக சுந்தரம், இரண்டாம் ஆயராக பாக்கியம் ஆரோக்கியசாமியும் இருந்தனர். தற்போது மூன்றாவது ஆயராக எம்.தேவதாஸ் அம்புரோஸ் இருந்து வருகிறார். இந்த மன்னார்குடி பங்கில் பல்வேறு பங்குத் தந்தைகள் பணியாற்றி உள்ள நிலையில், தற்போது அருள் தந்தை எம்.எல்.சார்லஸ் பங்குத் தந்தையாகவும் தந்தை விட்டல் பிரசாத் உதவி பங்குத் தந்தையாகவும் பணியாற்றுகிறார்கள். இந்த முப்பெரும் ஜீப்பிலி விழாவில்,  இறைமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொண்டு, பங்கின் பாதுகாவலரான புனித சூசையப்பர் ஆசிரை பெற்றுச் சிறக்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!