சிவனுக்கு உகந்த அபிஷேகப் பொருள்களும் அதன் பலன்களும்! #PhotoStory

சிவபெருமான், எளியவர்க்கும் அருளும் கருணை உள்ளம் கொண்டவர். ஆனாலும், சிவபெருமானின் திருவருளைப் பெற விரும்பும் அன்பர்கள், சிவபெருமானுக்கு பலவகையான அபிஷேகத் திரவியங்களால் அபிஷேகம்செய்து வழிபடுகின்றனர். இதன் பலனாக சிவபெருமானின் பேரருளுக்குப் பாத்திரராகி, பல நன்மைகளைப்பெறுகின்றனர்.

சிவனுக்கு பால் அபிஷேகம்


சிவபெருமானுக்கு உகந்த அபிஷேகத் திரவியங்களும் கிடைக்கும் பலன்களும்:


1.வலம்புரிச் சங்கு அபிஷேகம்:

வலம்புரிச் சங்கு


சிவபெருமானுக்கு மிகவும் உவப்பானது வலம்புரிச் சங்கினால் செய்யப்பெறும் அபிஷேகம். வலம்புரிச் சங்கில் மகாலட்சுமியும் குபேரனும் வாசம் செய்வதாக ஐதீகம். வலம்புரிச் சங்கினால் அபிஷேகம் செய்தால், சகல ஐஸ்வர்யங்களும் கிடைப்பதுடன், தீவினைகள் நீங்கி, நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும்.


2.விபூதி அபிஷேகம்:

விபூதி


விபூதியால் அபிஷேகம் செய்தால், இன்ப வாழ்க்கையும் மோட்சமும் கிடைக்கும்.


3.கரும்புச் சாறு:

கரும்புச் சாறு

கரும்புச் சாறினால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கி, ஆரோக்கிய வாழ்வைப் பெறலாம்.


4.எலுமிச்சம்பழச் சாறு: 

எலுமிச்சம் பழச் சாறு

 

எலுமிச்சம் பழச்சாறினால் அபிஷேகம் செய்தால்,  எதிரிகள் அச்சம் நீங்கி, பகைமைகள் விலகும்.


5.இளநீர்:

இளநீர்

 

இளநீரால் அபிஷேகம் செய்தால், இன்பமான வாழ்வு கிடைக்கும்.


6.பஞ்சாமிர்தம்: 

பஞ்சாமிர்தம்

பழங்கள், தேன், கற்கண்டு ஆகியவை சேர்த்த பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்தால், உடலும் உள்ளமும் வலிமைபெறும்.


 7.தேன்:

தேன்

 

தேனால் அபிஷேகம் செய்தால், இசை வல்லமை கிடைக்கும்.

8.பால்:

பால்

பாலால் அபிஷேகம் செய்தால், நோய்நொடிகள் நீங்கும்; ஆரோக்கிய உடல் நலத்துடன் ஆயுள் நீடிக்கும்.

9.தயிர்:

தயிர்

தயிரால் அபிஷேகம் செய்தால், நல்ல குழந்தைகளைப் பெறலாம்.

10.நெய்: 

நெய்

நெய்யால் அபிஷேகம் செய்தால், முக்தியைத் தரும்.


கோயிலாக இருந்தால், அர்ச்சகரிடம் கொடுத்து அபிஷேகம் செய்யச் சொல்லலாம். முறைப்படி வீட்டிலேயே சிவலிங்கம் வைத்து பூஜை செய்பவர்கள், அவரவர் விரும்பும் பலனுக்கு ஏற்ற அபிஷேகப் பொருள்களைக்கொண்டு அபிஷேகம் செய்யலாம்.

தொகுப்பு: ஜி.லட்சுமணன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!