குருபார்வை இருந்தால் மட்டுமே திருமணம் கைகூடுமா? | Impact of Guru View on Married Life

வெளியிடப்பட்ட நேரம்: 20:55 (03/03/2017)

கடைசி தொடர்பு:20:54 (03/03/2017)

குருபார்வை இருந்தால் மட்டுமே திருமணம் கைகூடுமா?

'திருவருள் பெறவும் குருவருள் தேவை' எனச் சொல்லுவார்கள். திருமணம் நடக்க வேண்டுமா? குரு பலன் வரட்டும். அரசு வேலை கிடைக்க வேண்டுமா? குரு பார்வை ( வியாழ நோக்கம்) கிடைக்கட்டும் என்று சொல்கிறார்களே. அதற்கு என்னதான் காரணம் என ஜோதிட நிபுணர் பெருங்குளம் ராமகிருஷ்ணனிடம் கேட்டோம். அப்போது அவர் கூறிய கருத்துக்களின் தொகுப்பு இதோ, உங்கள் பார்வைக்காக...

திருமணம்

ஜோதிடத்தில் குரு என்றாலும் வியாழன் என்றாலும் ஒன்றுதான். ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும், அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது எனப்ஜோதிட நிபுணர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் பொருள்.

கோச்சாரப்படி வியாழன் ( குரு ) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ பார்த்தால், அதை 'வியாழ நோக்கம்' என்பார்கள். இது ஆண்களுக்கு.

பெண்களுக்கு கோசாரப்படி வியாழன் ( குரு ) உங்கள் ராசியையோ அல்லது ஏழாம் இடத்தையோ அல்லது எட்டாம் இடத்தையோ பார்த்தால், அது 'வியாழ நோக்கம்' எனப்படுகிறது. சரி, விஷயத்துக்கு வருவோம். எதற்காக வியாழ நோக்கம்? குரு பார்வை வரும் போது எந்த தடங்கலும் இல்லாமல் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

அது ஏன் ஒரு வருடம்?

* குரு வருடத்துக்கு ஒரு முறை ராசி விட்டு ராசி இடம் பெயருவார். கோசாரப்படி லக்னத்தை குரு பார்த்தால் மட்டும், திருமணம் நடைபெற்று விடுமா? என்றால் உறுதியாக அதைச் சொல்ல முடியாது.

* கோசாரத்தில் இருக்கும் குரு, திருமணம் கைகூடி வர 20 சதவிகிதப் பலன்களையே தருவார். இதனால் சிலர் வியாழக்கிழமைதோறும் தக்ஷிணாமூர்த்திக்கு மாலையிட்டு வணங்கியும், விளக்கு வழிபாடு என பரிகாரங்கள பல செய்தும் திருமணம் நிறைவேறவில்லையே என வருந்துபவர்களும் உண்டு.

* தசாபுக்தி அனுகூலம், கிரகங்கள் இருக்கும் இடம், கிரகப் பார்வை ஆகியவற்றையும் கவனிக்க வேண்டும். இதனால் ஒருவரது ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்துத்தான் சொல்லவேண்டும்.

குரு பார்வை

* நமது ஜாதகப் பலன்கள் ஒருவரது ஜாதகத்தில் முக்கியமானவைகளாக தசா புத்தி பலன்களைத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும். மேலும் கோசாரப்படி பார்க்கும்போது லக்னத்தை உங்கள் ராசியாக்கி, அதற்கு ராசிபலன் பாருங்கள். எனவே, திருமணம் நடைபெறுவதற்கு உங்கள் தசா புக்தி உதவினால்தான் அது நடைபெறும்.

* நாம் பார்க்கும் வரன்களுக்கு குரு பார்வை இருந்தாலும் போதும். அதாவது மாப்பிள்ளை அல்லது பெண் இருவரில் ஒருவருக்கு அனுகூலமான தசை நடந்தாலோ, குரு பார்வை இருந்தலோ, திருமணம் நடந்து விடும். கோட்சாரத்தைப் பார்ப்பதை விட தசாபுக்தி பலன்களைப் பார்ப்பதே நல்லது.

குருவால் ஏற்படும் பாக்கியங்கள்:

* பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள், குரு பலத்தால் பெறக்கூடியதாகும். ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால், அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

குரு பார்வை

* ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும், அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது எனப் பொருள். 

* அரிய சாதனைகளைச் செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில்  புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.

- எஸ்.கதிரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்