தேர்வில் வெற்றிக்கு எந்தக் கடவுளை வணங்கலாம்?#Astrology

தமிழகம் முழுவதும் + 2 தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து  பத்தாம் வகுப்புத்தேர்வுகள் நடைபெற உள்ளன.  ஒவ்வொரு மாணவ மாணவியும் தாங்கள் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற விரும்புவார்கள். மாணவ மாணவிகள் தேர்வில் வெற்றி பெற எந்த தெய்வத்தை வழிபடலாம்? ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் குறிப்பிட்ட தெய்வத்தை வழிபடவேண்டும் என்ற நியதி உள்ளதா? அப்படி இருந்தால், எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த தெய்வத்தை வணங்க வேண்டும் என்பது பற்றி ஜோதிடச்சுடர் ந.ஞானரதத்தைக் கேட்டோம்.

தேர்வில் வெற்றி பெற 

ந.ஞானரதம்''பொதுவாக, கல்விக்கு காரகத்துவம் பெற்றவர் என்று பார்த்தால் சரஸ்வதி மற்றும் ஹயக்ரீவர்தான். ஆனாலும், கூடவே ஜாதகர் தங்கள்  நட்சத்திரப்படியும் கடவுளை வழிபடுவது சிறந்த பலன்களைத் தரும். குல தெய்வத்தையும் வழிபட மறக்கக்கூடாது. பிறந்த நட்சத்திரங்களின் அடிப்படையில் கடவுளை வழிபடுவது நல்லது. பொதுவாக, ஜாதகத்தில் பன்னிரெண்டு ராசிகள், ஒன்பது கிரகங்கள், 27 நட்சத்திரங்கள்,  30 திதிகள் உள்ளன. இதில் நாம் அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது ராசிக்கும் நட்சத்திரத்துக்கும்தான். 

நாம் கோயிலுக்குச் சென்று வழிபடும்போது நட்சத்திரத்தின் பெயரையும் மற்றும் ராசியின் பெயரையும் சொல்லி அர்ச்சனை செய்து வருவது நன்கு அறிந்த ஒன்றே. அப்படியென்றால் நட்சத்திரம் என்பது, மிக முக்கியம் வாய்ந்தது என அறியலாம். அவரவர் நட்சத்திரத்தின் அதிபதியான கடவுளை வழிபடும்போது நம் மனம் சாந்தி அடையவும், நமக்கு நல்வழி பிறக்கவும் உதவுகின்றது. இந்த 27 நட்சத்திரக் கடவுளர் யார் யார் என்பதை அறிந்து வழிபடும் விதமாக கீழே குறிப்பிட்டுள்ளோம். அவரவர் நட்சத்திர நாளன்று கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. 

சரஸ்வதி


அசுவினி - ஸ்ரீ சரஸ்வதி தேவி

பரணி - ஸ்ரீ துர்கா தேவி

கார்த்திகை - ஸ்ரீ சரவணன் (முருகப் பெருமான்)

ரோகிணி - ஸ்ரீகிருஷ்ணர். (மகா விஷ்ணு)

மிருகசீரிடம் - ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர் (சிவ பெருமான்)

திருவாதிரை - ஸ்ரீ சிவபெருமான்

புனர்பூசம் - ஸ்ரீ ராமர் (மகா விஷ்ணு)

பூசம் - ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ( சிவபெருமான்)

ஆயில்யம் - ஸ்ரீ ஆதிசேஷன் (நாகம்மாள்)

மகம் - ஸ்ரீ சூரிய பகவான் (சூரிய நாராயணர்)

பூரம் - ஸ்ரீ ஆண்டாள் 

உத்திரம் - ஸ்ரீ மகாலட்சுமி

ஹஸ்தம் - ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை - ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி - ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம் - ஸ்ரீ முருகப் பெருமான்.

அனுஷம் - ஸ்ரீ லட்சுமி நாராயணர்.

கேட்டை - ஸ்ரீ வராஹ பெருமாள் 

மூலம் - ஸ்ரீ ஆஞ்சநேயர் 

பூராடம் - ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் (சிவபெருமான்)

உத்திராடம் - ஸ்ரீ விநாயகப் பெருமான்.

திருவோணம் - ஸ்ரீ ஹயக்கிரீவர் 

அவிட்டம் - ஸ்ரீ அனந்தசயனப் பெருமாள்

சதயம் - ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர் (சிவபெருமான்)

பூரட்டாதி - ஸ்ரீ ஏகபாதர் (சிவபெருமான்)

உத்திரட்டாதி - ஸ்ரீ மகா ஈஸ்வரர் (சிவபெருமான்)

ரேவதி - ஸ்ரீ ரங்கநாதர் 

போன்ற மேற்குறிப்பிட்ட அவரவர் நட்சத்திரத்துக்கு உரிய கடவுளை நாம் அனுதினமும் வழிபட்டால், நினைவாற்றல் பெருகுவதுடன் நன்கு படித்து தேர்வில் வெற்றி பெறுவர்.

-எஸ்.கதிரேசன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!