வளம் தரும் காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில் தரிசனம் #PhotoStory 

காஞ்சிபுரத்தில், ஏராளமான வைணவ தலங்கள் உள்ளன. ஆனால் அதில் மிக முக்கியமான ஒரு கோயில் காஞ்சி ஸ்ரீவரதராஜ பெருமாள் கோயில்.  108 திவ்ய தேசங்களில் 44-வது திவ்ய தேசம். ஸ்ரீஹயக்ரீவர், அகத்தியருக்கு 'ஸ்ரீவித்யை'யை உபதேசித்த தலம்... இப்படி பல சிறப்புகள் கொண்ட இத்திருத்தலம் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ளது.

ஸ்ரீவரதராஜ பெருமாள் 

யாகம் செய்த பிரம்மாவுக்கு எம்பெருமான் வரம் தந்ததால் 'வரதராஜர்' என்று அழைக்கப்படுகிறார்.  இவர் கோயில் கொண்டுள்ள திருத்தலம், சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக  அமைந்துள்ளது. கிழக்கு கோபுரம் 9 நிலைகளுடனும் மேற்கு கோபுரம் 7 நிலைகளுடனும் திகழ்கின்றன. 

கோயில் கோபுரம் 

கருவறையில் புண்ணியகோடி விமானத்தின் கீழ், நின்ற திருக்கோலத்தில் அருள் பாலிக்கிறார் மூலவர் ஸ்ரீதேவராஜர். இவருக்கு தேவ பெருமாள், தேவாதிராஜன், தேவராஜ ஸ்வாமி, அத்தியூரான், அத்திவரதன், கஜேந்திர வரதர் என பல பெயர்கள் உண்டு.

ஸ்ரீவரதராஜ பெருமாள், பெருந்தேவி தாயாருடன் 

உற்சவர்

ஸ்ரீவரதராஜர் என்ற பெயர் இங்குள்ள உற்சவரையே குறிக்கும். பிரம்மோற்சவத்தின் போது பெருமாள் மட்டுமே திருவீதி உலா வருவார். பெருந்தேவி தாயாருக்கு திருவீதி புறப்பாடு கிடையாது. 

திருக்குளம் 

திருக்குளம்

மண்டபத்தின் அருகே 'அனந்த சரஸ்' எனும் தீர்த்தம் உள்ளது.  இதில்  சனிக்கிழமைகளில் நீராடுவோருக்கு காவிரியில் நீராடிய பலன் கிட்டும். ஆதிசேஷன் இதில் நீராடி பூமியைத் தாங்கும் வல்லமை பெற்றாராம். இதை 'சேஷ தீர்த்தம்' என்றும் கூறுவர்.

ஸ்ரீஅத்தி வரதர் 

ஸ்ரீஅத்தி வரதர்

இங்குள்ள நீராழி மண்டபத்தின் அடியில் நீருக்குள் வெள்ளிப் பேழை ஒன்றில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீஅத்தி வரதர். நீருக்குள் இருக்கும் அவரை 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை  மட்டும் வெளியே கொண்டு வந்து ஒரு மண்டலம்  பக்தர்களின் தரினத்திற்காக வைக்கப்படுகிறார்.

பல்லி தரிசனம்  


பல்லி தரிசனம்

இங்கு உள்ள 'வையமாளிகை பல்லி' தரிசனம் சிறப்பானது.  இதைத் தொட்டு வணங்கு பவர்களுக்கு பல்லி விழுவதால் ஏற்பட கூடிய சகல தோஷங்களும் பாவங்களும் நீங்கி ஐஸ்வரியங்கள் பெருகும் என்பது ஐதீகம்.

ஶ்ரீநம்மாழ்வாருடன்  திருக்கச்சி நம்பிகள், ஸ்வாமி தேசிகன் 

இங்கு ஶ்ரீநம்மாழ்வாருடன்  திருக்கச்சி நம்பிகள், ஸ்வாமி தேசிகன், ஶ்ரீராமநுஜர் ஆகியோரையும் தரிசிக்கலாம். கள்ளழகர் வைகையில் இறங்குவது போல, ஸ்ரீவரதராஜ பெருமாள், காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள பாலாற்றில் இறங்கும் 'நடபாவி உற்சவம்' சித்ரா பௌர்ணமி அன்று நடைபெறுகிறது.


இக்கோயில் பற்றிய மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்

தொகுப்பு: லட்சுமணன்.ஜி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!