இப்போது அரசியலுக்கு வந்தால் கமல் ஜெயிப்பார்! #Astrology | This is the right Time for kamal Haasan to enter Politics as per Astrology

வெளியிடப்பட்ட நேரம்: 07:29 (17/03/2017)

கடைசி தொடர்பு:13:09 (17/03/2017)

இப்போது அரசியலுக்கு வந்தால் கமல் ஜெயிப்பார்! #Astrology

தமிழக அரசியலுக்கும் சினிமாத்துறைக்கும் நீண்டகாலத் தொடர்பு உண்டு. அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என 60 ஆண்டுக்காலத் தமிழகத்தின் அரசியல் சரித்திரமே இவர்களால்தான் எழுதப்பட்டிருக்கிறது.

திரையுலகைச் சேர்ந்தவர்கள் சினிமாவுக்கு வருவது தமிழகத்தில் மட்டும்தான் நிகழ்ந்திருக்கின்றதா என்றால், அண்டை மாநிலமான ஆந்திராவிலும் நடந்தேறியிருக்கிறது. 

அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் 1972-ல் கட்சி ஆரம்பித்து ஐந்து ஆண்டுகளில் 1977 - ல் ஆட்சியைப் பிடித்தாரென்றால். என்.டி.ஆர் ஒரு படி மேலே போய், 1982 - ல் கட்சியை ஆரம்பித்து அடுத்த வருடமே முதலமைச்சரானார். ஆந்திராவில் நிகழ்ந்த அதிசயம் இது.

நடிகர்களை நாடாள வைப்பது இந்தியாவில்தான் நடக்கின்றது என்ற விமர்சனங்கள் எழுந்த வேளையில்தான், அமெரிக்க ஜனாதிபதியாக ரொனால்டு ரீகன் தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வருவதற்கு முன்பு  துப்பாக்கியால் சுடப்பட்டு, அதிலிருந்து உயிர் தப்பினார். 

ஜெயலலிதா

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆரைத் தொடர்ந்து ஜெயலலிதா அரசியலுக்கு வந்து வெற்றிபெற்றார். கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர் ஆகியோர் 90 - களில் தனித்தனியாகக் கட்சி ஆரம்பித்து அரசியலில் நுழைந்தனர். ஆனால் பெரிதாக வெற்றி பெறவில்லை. 

1996 - ல் இருந்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது போலவும் வராதது போலவும் கண்ணாமூச்சி விளையாட்டை விளையாடினார். அவரது விளையாட்டுக்கு குசேலன் படத்தின் வாயிலாக அவரே வணக்கம் போட்டார். 

இப்போதும் அவரது ரசிகர்கள் அவரை அரசியலுக்கு வர வேண்டுமென நினைத்தாலும், ’ஆன்மிகமா? அரசியலா?’ எனத் தன்முன் இருக்கும் இரண்டு பாதையில் ஆன்மிகத்தையே அவரது மனம் பெரிதும் விரும்புகின்றது.

விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் மிகச் சிறப்பான முறையில் தொடங்கி நல்ல முறையில் வளர்ந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்பது வரை வளர்ந்த அவரது அரசியல்  கிராஃப் அதன் பிறகு இறங்கத் தொடங்கிவிட்டது. ஜெயலலிதா மறைந்த நிலையில் இப்போது, அ.தி.மு.க ஓரளவுக்குக் கலகலத்துப்போயிருக்கும் சூழல். 

கமல்

தமிழகத்தில் மக்கள் பிரச்னைகளில் அவ்வப்போது குரல் கொடுத்துவந்த நடிகர் கமல்ஹாசன் இப்போது பல விஷயங்களில் தனது கருத்துகளை அவ்வப்போது வெளியிட்டு வருவதுடன், அவரது ட்வீட்டுகளுக்கு நிறையவே வரவேற்பு பெறுகிறார். கூடவே தனது நற்பணி இயக்கத்தினருடன் சிலநாட்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தியிருக்கிறார். இந்த நிலையில் கமல் அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி எல்லோர் மத்தியிலும் எழுந்திருக்கிறது. ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்தி

இப்போது அரசியலுக்கு வந்தால் கமல் ஜெயிப்பாரா என்று ஜோதிட நிபுணர் சூரிய நாராயணமூர்த்தியிடம் கேட்டோம்.

''கமல்ஹாசன் உத்திரட்டாதி நட்சத்திரம் மீன ராசி. மீன லக்னம். தற்போது அவருக்கு சந்திர திசை 11-10-2018 வரை நடப்பில் இருக்கின்றது. 

வருகின்ற நவம்பர் மாதத்துக்குப் பிறகு மீன லக்னத்துக்கு பாக்கியஸ்தானாதிபதியான செவ்வாய் திசை தொடங்க இருக்கின்றது. இவரது ஜாதகத்தில் செவ்வாய் மகரத்தில் உச்சம் பெற்றிருக்கின்றார். 

செவ்வாய்,  பொது மக்கள் குறிப்பாக  ஏழை மக்கள், புறக்கணிக்கப்பட்டவர்களுக்காக கோபாவேசத்துடன் போராடும் குணம் மிக்கவர். இந்த நேரத்தில் ஏதேனும் அமைப்பு, இயக்கம், கட்சி தொடங்கினால், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி அதில் வெற்றியும் பெறுவார்.

கமல் ஜாதகம்

அரசியலில் வெற்றி பெற சிறப்பான காரணங்கள்:

* லக்னாதிபதி குரு கடகத்தில் உச்சம் பெற்று நிற்கின்றார். உச்சம் பெற்ற லக்னாதிபதி, முற்போக்குச் சிந்தனைகளையும், எண்ணியதை எண்ணியபடி முடிக்கும் பிடிவாத குணத்தையும் தருவார்.

* அரசியலுக்கு முக்கிய கிரகமான செவ்வாய் உச்சம் பெற்று இருப்பது மனதைரியத்தைத் தருவதுடன் உலகமே ஒருபக்கம் நின்றாலும் தன் மனதுக்குச் சரியென்றுபடுவதை செய்யத்தூண்டும்.

* ஆளுமைத்திறன் அளிக்கும் சூரியன், நீசம் அடைந்திருக்கின்றது. இது ஒரு வகையில் மைனஸ் பாயின்ட்தான் என்றாலும், அவர் உச்சம் பெற்ற சனியுடன் சேர்ந்து இருப்பதால் நீசபங்க ராஜயோகம் அமைகின்றது.

*ராஜாங்க கிரகங்களான சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் யோகம் அளிக்கும் நிலையில் இருப்பதால், அரசியலில் வெற்றி கிடைக்கும்.

- எஸ்.கதிரேசன்      

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்