வெளியிடப்பட்ட நேரம்: 07:34 (05/04/2017)

கடைசி தொடர்பு:07:34 (05/04/2017)

பங்குச் சந்தை மற்றும் ஸ்பெகுலேஷன் துறைகள்... எந்த ராசிக்காரர்களுக்கு யோகம் தரும்? #Astrology

ங்குச் சந்தை வர்த்தகத்தில் பணம் ஈட்டுவது இன்றைக்குப் பட்டிதொட்டியெல்லாம் பரவிக் கிடக்கின்றது. ஒரு காலத்தில் படித்த, உயர்தட்டு மக்கள் மட்டுமே இதில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், அதன் விதிமுறைகள் எளிமைப்படுத்தப்படவே, நடுத்தரவர்க்கத்தினரும், இதில் ஈடுபட்டு நல்ல லாபம் பார்த்து வருகிறார்கள். ஒரு சிலர்  வெற்றி பெறும் அதேவேளையில், ஒரு சிலர் சூடுபட்ட பூனையைப் போல் தெறித்து ஓடுகின்றனர். இதற்கெல்லாம் என்ன காரணம்? எந்தவிதமான ஜாதக அமைப்பு பங்குச் சந்தை மற்றும் ஸ்பெகுலேஷன் துறைகள் யோகம் தரும் என்பது பற்றி ஜோதிட முனைவர் கே.பி.வித்யாதரனிடம் கேட்டோம்.

யோகம்

இந்த உலகில் ஒரு மனிதன் பிறவி எடுக்கும்போதே, அந்த ஜாதகர் என்னவிதமான வாழ்க்கையை வாழ்வார். 16 வகையான செல்வங்களில், எவை எவை அவருக்குக் கிடைக்கப் பெறும். எவை எவை மறுக்கப்படும் என்பதெல்லாம் நிச்சயிக்கப்பட்டுவிடும்.  அவரது செல்வத்தின் நிலை, அவருக்கு அது கிடைக்கப்பெறும் வழிமுறைகள் எல்லாமே அவரது ஜாதகத்திலிருக்கும் கிரக நிலைகளை வைத்தே சொல்லிவிடலாம்.

பங்குச் சந்தையில் தினசரி ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு சந்திரனும், பணமதிப்புக்கு சுக்கிரனும், பன்னாட்டுத் தகவல்தொடர்புக்கு புதனும், நேரத்துக்கு குருவும் காரகத்துவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

எந்த ஒரு ஜாதகராக இருந்தாலும், அவரது லக்னத்திலிருந்து 5 - ம் இடத்தின் அதிபதி, 10 -ம் இடத்தில் இருந்தால், அவர் பங்குச் சந்தையில் வெற்றிபெற்று லாபம் ஈட்டுவார்.

அதிர்ஷ்டம்
 

சந்திர பலம் நிச்சய லாபம் (கடகம், ரிஷபம்)! 

ஜாதகத்தில் சந்திரன் ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள்,  தினமும் பங்குச் சந்தையில் லாபம் ஈட்டலாம். நீண்ட காலம் காத்திருக்க வேண்டியதில்லை. வாங்கிய பங்குகளை சரியான நேரத்தில் விற்பதிலும், அடிமாட்டு விலைக்கு புதிய பங்குகளை வாங்குவதிலும் வல்லவர்களாக இருப்பார்கள். தோட்டத்தில்  தினமும் புதிய புதிய பூக்கள் பூப்பது போல் தினமும் புதிய புதிய பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள். சுறா மீன் வேட்டையைவிட நம் ஊர் ஆற்றில் கிடைக்கும் நெத்திலிமீன் சுவையே தனிதான் என்று சிறிய லாபம் கிடைத்தால் போதும் என்று இருப்பார்கள்.வித்யாதரன்
 

அவருக்கு என்ன... சுக்கிரன் உச்சம்! (ரிஷபம், துலாம், மீனம்)!

குறைந்த விலையில் வாங்கிய முதலீடுகளை, நல்ல விலைக்கு விற்றுவிட்டு, அதில் கிடைக்கும் லாபத்தை மட்டும் எடுத்து, ஜாலியாக செலவு செய்துகொண்டு சுகபோகமாக வாழ்வார்கள். ஆனால், அடுத்தவர்களின் கண்களை உறுத்தாத வகையில் தங்கள் செயல்பாடுகளை வைத்துக்கொள்வது நல்லது. கிடைத்த லாபத்தை வெளியில் சொல்லி, தானே புத்திசாலி எனக் காட்டிக்கொண்டால், காலம் கீழே தள்ளிவிடும் அபாயமும் உண்டு. 
 

செவ்வாய்  ஆட்சி, உச்சமா (மேஷம், விருச்சிகம், மகரம்)

ஜாதகத்தில்  செவ்வாய்  ஆட்சி, உச்சத்தில் இருப்பவர்கள், சந்தை எவ்வளவு கீழே போனாலும், என்ன ஆட்டம் காட்டினாலும், அசரமாட்டார்கள். அசைவற்று பாறையாய் கிடந்து இரையைக் கவ்வும்  முதலையைப் போல்  பொறுமையாகக் காத்திருந்து நல்ல லாபம் பார்ப்பார்கள். பங்குச்சந்தைக்குத் தேவையான  அசாத்திய துணிச்சல் இவர்களுக்கு உடன் பிறந்த ஒன்றாகும். ஏதேனும் தீய கிரகச் சேர்க்கை இருந்தால், காலமே கீழே தள்ளிவிடும்.  
 

புதன் ஆட்சி, உச்சம் பெற்றவர் (மிதுனம், கன்னி)!

இவர்கள் ரொம்பவும் புத்திக்கூர்மையுடன் வேலை பார்ப்பார்கள். ஜெயிக்கிற குதிரையில்தான்  பணம் கட்டுவார்கள். ஏஜென்டுகள், நிதி ஆலோசகர்கள் துணையில்லாமல் பங்குகளை வாங்கவும் மாட்டார்கள்; விற்கவும் மாட்டார்கள். இவர்களது தோற்றத்துக்கும் செயல்பாடுகளுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கும். சந்தையில் ரொம்பவும் நாசூக்காக நடந்துகொண்டு காரியம் சாதிப்பார்கள்.


கூட்டம் மகிழ்ச்சி

சூரியன், ஆட்சி, உச்சம் பெற்ற ஜாதகர்  (சிம்மம், மேஷம்)!

ஜாதகத்தில் சூரியன்  ஆட்சி, உச்சம் பெற்று இருப்பவர்கள், பங்குச் சந்தையில் பெரும் ஆளுமை மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களது ஆளுமையின் கீழ் பல கமிஷன் ஏஜென்டுகள், தரகர்கள் பணிபுரிவார்கள். இவரிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நல்ல லாபம் பெற்றுத் தருவார்கள். எப்போதும் செல்வாக்கு மிக்க ஒளிவட்டத்தில் இவர் இருப்பதால், பலரும் இவரை நாடி வருவார்கள். பங்கு வர்த்தகத்தை மட்டும் தொழிலாக கொள்ளாமல், வேறு துறைகளிலும் சாதனை படைப்பார்கள். ஒரே நிறுவனப் பங்கையே முறையாகக் கையாண்டு நல்ல லாபம் பார்ப்பார்கள்.

வெற்றி மனிதன்

 

சனி ஆட்சி, உச்சம் பெற்றவர்கள் (மகரம், கும்பம், துலாம்)

பங்குச் சந்தையில் திடீர் பிரவேசம் செய்பவர்கள் இவர்கள். இதனால், திடீரென லாபம் கிடைக்கவேண்டும் என எண்ணுவார்கள். ஒருசிலருக்கு ஒரு சில நேரங்களில் அப்படி லாபம் கிடைப்பது உண்டு. ஆனால், எல்லா நேரமும் அப்படி நிகழுவதில்லை. ஆனால், லாபம், நஷ்டம் இரண்டுமே இவர்களுக்கு பெரிய அளவில் இருக்கும். இதனால்  சிலர் மிகவும் நொடித்துப் போய் நலிந்த நிலைக்கு வரவேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம். அதனால் இவர்கள் மிகுந்த கவனத்துடன் பங்குகளைக் கையாள்வது நல்லது .

குரு, ஆட்சி, உச்சம் பெற்றவர்கள் (தனுசு, மீனம், கடகம்)!

இவர்கள் பங்குச் சந்தையில் பெரும்பாலும் நேரடியாகப் பங்கு பெற மாட்டார்கள். ஆனால், மிகச் சிறந்த நிதி ஆலோசகர்களாக இருப்பார்கள். இதனால், இவர்களுக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இருப்பார்கள். பங்குச் சந்தையின் தட்பவெப்ப நிலையை மிகச்சரியாக கணிப்பதால், இவர்களுக்கு நிரந்தர வாடிக்கையாளர்கள் உண்டு. பங்குச் சந்தையில் இவர்கள் சிறிதளவே முதலீடு செய்வார்கள். பெரும்பாலும் நீண்டகாலம் கழித்து பலன் அளிக்கும் பங்குகளில் முதலீடு செய்துவிட்டு பிறகு அவர்களின் தினசரி வேலையைப் பார்க்கத் தொடங்கிவிடுவார்கள்.

- எஸ்.கதிரேசன்

நீங்க எப்படி பீல் பண்றீங்க