வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (06/04/2017)

கடைசி தொடர்பு:11:56 (06/04/2017)

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்குச் சென்றுவந்த உங்கள் அனுபவம் எப்படி? #VikatanSurvey

த்தனை கோயில்கள் இருந்தாலும், எத்தனை மடங்கள் இருந்தாலும், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மட்டும் வருடம் 365 நாட்களும் 24 மணி நேரமும் கூட்டம் இருந்துகொண்டேதான் இருக்கிறது. குறிப்பாகத் தமிழர்கள் அங்கு சென்று சுவாமி  தரிசனம் செய்வது அதிகமாகவே இருக்கின்றது. பக்தர்கள் ரெயில், பஸ், கார் மூலமாகவும் திருமலைக்கு வந்து செல்கின்றனர். பலர் கீழ்த்திருப்பதியிலிருந்து மேல் திருப்பதிக்கு மலைப் படிக்கட்டுகள் வழியாக, நடந்துசென்று ஏழுமலையானைத் தரிசிக்கின்றனர். திருப்பதியில் இருக்கும் பாலாஜி கலியுகத்தின் கடவுளாக பார்க்கப்படுகிறார். திருப்பதிக்குச் செல்லும்  பக்தர்களின் ஈடுபாட்டைத் தெரிந்துகொள்வதற்கான இந்த சர்வேயில் பங்கேற்று உங்கள் பதில்களைப் பதிவுசெய்யுங்கள்...

திருமலை - திருப்பதி ஏழுமலையான் கோயில் சென்றுவந்த உங்களின் அனுபவம் எப்படி?#VikatanSurvey

1). நீங்கள் ஒரேநாளில் திருப்பதி பெருமாளை தரிசித்திருக்கிறீர்களா? *

2). வெங்கடாசலபதியை தரிசிக்கப் பாத யாத்திரையாகச் சென்றிருக்கின்றீர்களா ? *

3). திருமலையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவத்தில் கலந்து கொண்டு இருக்கிறீர்களா? *

4). ஒவ்வோர் ஆண்டும் தவறாமல் திருப்பதிக்குச் செல்பவரா நீங்கள்? *

5). திருப்பதியில் இருக்கும் தங்கும் விடுதிகள், உணவுகள் , பேருந்துகள் போன்றவற்றின் வசதிகள் உங்களுக்குத் திருப்திகரமாக அமைந்துள்ளதா? *

6). திருப்பதிக்குச் செல்லும்போதெல்லாம் உண்டியலில் காணிக்கை செலுத்துவது, முடியைக் காணிக்கையாக கொடுப்பது இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றீர்களா? *

7). திருப்பதிக்குச் செல்லும்போதெல்லாம் பத்மாவதி தாயாரையும் தரிசிக்கும் வழக்கம் உண்டா? *

8). வேங்கடநாதனை தரிசிக்க 2 நாட்களுக்கு மேல் காத்திருந்த அனுபவம் உண்டா? *

9). கூட்டம் காரணமாக தரிசிக்க முடியாமல் திரும்பிய அனுபவம் உண்டா? *

10). 'திருப்பதி சென்றால் திருப்பம்' இதை உங்கள் வாழ்வில் உணர்ந்தது உண்டா? *

இந்த சர்வே முடிவினை பிரசுரிக்கும்போது, தங்களுக்கு தகவல் தெரிவிக்க தங்கள் mail ID -ஐ பதிவு செய்யவும்! (optional)

- கி.சிந்தூரி

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்